Menu Close

Category: இயேசு யார்

இயேசு கிறிஸ்து ஒரு மதத்தலைவர் அல்ல. ஒரு மதத்தை அவர் உருவாக்கவுமில்லை. இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தேவன். மதங்கள் கூறியதன் சாரம்சம். யூதமதம் காத்திருந்த மேசியா. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1: 29). அவருக்கு மத எல்லைகள் இல்லை. தேச எல்லைகள் இல்லை. எங்கும் விரிந்த வானம் போல, அனைவருக்கும் பொதுவான கதிரவனைப் போல, உலகின் ஒரே இரட்சகர் (அப்போஸ்தலர் 4 : 12). அவர் தந்தது மார்க்கம். உலக மக்கள் அனைவருக்குமான இரட்சிப்பின் மார்க்கம். அது தேவன் மனிதனாக வந்த மார்க்கம். தேவ ஆலோசனையில் போதித்த மார்க்கம். மனிதரை பரலோகம் சேர்க்கக் கரம் பிடிக்க வந்த மார்க்கம். அது பாவ உலகிற்காக உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் (லூக்கா 1: 78, 79). இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள் (மத்தேயு 1 : 21). தேவன் பரிசுத்த ஆவியினால் இயேசுவை அபிஷேகம் பண்ணினார் (மத்தேயு 3 : 16 ,17, யோவான் 3:34 ). அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசுகிறிஸ்து என்றழைக்கி றோம். இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமின்றி, தம்மை விசுவாசிக்கிறவர்களில் வாஞ்சையோடு கேட்கிறவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுகிறவராகவும் இருக்கிறார் (மத்தேயு 3:11)

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

நற்செய்தி நூல்களில் இயேசு

மத்தேயு இயேசுவை ஒரு அரசராக அறிமுகப்படுத்துகிறார். இதை யூதருக்கு எழுதுகிறார். இயேசு ஆபிராகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாக இருக்கிறார். மாற்கு இயேசுவை ஒரு…

வருங்காலத்தில் இயேசு

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்தேயு 28 : 18), சபையை உலகினின்று எடுத்துக் கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1…

இயேசு ராஜா

யூதருக்கு ராஜா: இயேசு குழந்தையாயிருக்கும் போது பார்க்க வந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப்…

இயேசு கிறிஸ்து தேவனாய் இருக்கிறார்

புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் ஆண்டவரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசாயா…

இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர்

தேவனிடத்திலிருந்த “வார்த்தை’ தேவனாயிருந்தார் (யோவான் 1 :1 ,2 ). எனவே பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள். இயேசு தேவனைத் தமது பிதா என்று…

இயேசு வகித்த மூன்று பதவிகள்

அக்காலத்தில் இஸ்ரவேலில் ஆசாரிய பதவியும், அரச பதவியும் இரண்டு வேறுபட்ட உயர்பதவிகளாக இருந்தன. ஆசாரியப் பணியைச் செய்யத் துடித்த அரசராகிய உசியா தண்டிக்கப்பட்டதை,…

இயேசு இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்தார்

இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம்…