Menu Close

Category: சிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்

உலகத்தை தன் வார்த்தையால் படைத்தவர் இயேசு. நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி அழைத்தவர் இயேசு. கடலின் மேல் நடந்து, காற்றையும், கடலையும் அமர்த்தினவர் இயேசு. இப்படிப்பட்டவரை போர்சேவகரும், ஆயிரம் போர்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் கைது செய்யப்பட்டு அந்த வருஷத்து பிரதான ஆசாரியனாகிய காய்பா வுக்கு மாமனாகிய அன்னா என்பவனிடத்துக்குக் கொண்டு போனார்கள் (யோவான்18 : 13). அதன்பின் இயேசுவைக் காய்பாவினிடம் கூட்டிச் சென்றனர். அங்கே வேதபாரகரும், மூப்பரும் இருந்தனர் (மத்தேயு 26 : 57). பின் ஆலோசனை சங்கத்திற்குக் கூட்டிச் சென்றனர் (லூக்கா 22 : 66). பின் பிலாத்துவின் முன் கொண்டு சென்றனர் (மாற்கு 15 : 1). பிலாத்து இயேசு ஏரோதின் அதிகாரத்துக்குட்பட்டவரென்று ஏரோதிடம் அனுப்பினார் (லூக்கா 23 : 7). ஏரோது திரும்பவும் இயேசுவை பிலாத்துவிடம் அனுப்பினான் (லூக்கா 23 : 11).
இயேசுவின் 12ம் வயதில் திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணியபோது பொந்தியு பிலாத்து என்பவனை யூதேயாவுக்குத் தேசாதிபதியாக்கினான் (லூக்கா 3 : 1). பொந்தியு என்பது பிலாத்துவின் ஊர். பிலாத்து என்பது அவனுடைய பெயர். யூதர்கள் எப்பொழுதும் ரோமர்களின் கட்டளை களுக் குக் கீழ்ப்படியாததால் அவர்களை அடக்க ரோமாபுரியிலிருந்து நீதியுள் ளவரான, பரிசுத்தமுள்ளவரான இயேசு யாரென்று தெரியாத பிலாத் துவை அமர்த்தினான். இந்தப் பிலாத்து யோவான் 19 : 1ல் இயேசுவை வாரினால் அடித்தான். பிலாத்து தன்னுடைய வாயால் இயேசு விடம் ஒரு குற்றமும் காணேன் என்றான் (யோவான் 19 : 4). அதன்பின் இயேசுவின் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்களினால் முடியைப் பின்னி அதை இயேசு வின் சிரசில் வைத்து, அவர்மேல் துப்பி, பரியாசம்பண்ணி சிலுவையில் அறையும்படி கொண்டு போனார்கள் (மத்தேயு 27 : 28 – 31), சீமோன் என்னப்பட்ட ஒருவனை சிலுவையை சுமக்கப் பலவந்தம் பண்ணி கொல்கொதாவுக்கு இயேசுவைக் கூட்டிசென்றார்கள் (மாற்கு 21, 22).
இயேசுவை சிலுவையில் அறைந்தபின் இயேசுவின் வஸ்திரங்களை சீட்டுப்போட்டுப் பங்கிட்டுக் கொண்டார்கள். ரோமர்களின் மரண தண்டனை என்பது சிலுவையில் அறையப்படுவதுதான். எனவேதான் இயேசுவை சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தனர். கிறிஸ்து தம்மை வெறுமையாக்கிப் பாடுபட்டதினால் நாம் அப்பாடுகளின் பாக்கியவான் களாக இருக்கிறோம். அவர் தம்மைத் தாழ்த்தி அடிமையின் ரூபம் எடுத்ததினால் நாம் புத்திர சுவிகார அதிகாரத்தைப் பெற்றிருக்கிறோம். அவர் சிலுவை சுமந்து இரத்தம் சிந்தியதால் நாம் பாவமன்னிப்பின் மீட்பைப் பெற்றோம். பாளையத்திற்குப் புறம்பே இருந்த நம்மைப் பரலோகத்துக்குள் வாசம் பண்ணும்படி தகுதியுள்ளவர்களாக மாற்றியது கிறிஸ்துவின் சிலுவை மரணமே.
சிலுவையைப் பற்றின உபதேசம் நம்மை இரட்சிப்பதோடு இரட்சிக்கப் படுகிறவர்களுக்குத் தேவபலனையும் அளிக்கிறது. மனித ஞானத்தினா லும், நயவசனத்தினாலும், மக்களை மீட்பின் பாதையில் நடத்த ஒருவரா லும் இயலாது. பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் தேவ காரியங்களைச் சிலுவை உபதேசத்தின் மூலம் வெளிப்படுத்துகிறவரா யிருக்கிறார். ஆகவே ஆவியானவரின்பலத்தினால் சிலுவையைச் சுமந்து அனுதினமும் ஆண்டவரைப் பின்பற்றி நடந்து அவருக்காய் வாழ்வோம். கிறிஸ்தவ வாழ்க்கை சிலுவையைச் சுமந்து ஆண்டவருக் காய் சாட்சி கூறும் வாழ்க்கையென்பதால் அந்தச் சாட்சியை சிலுவை யோடு உயர்த்திக் கூறுவோம். சிலுவையில் அறையப்பட்டு பாடுகளின் மத்தியிலும், வேதனைகள் மத்தியிலும் இயேசு கூறிய ஏழு வார்த்தை களும் மிகவும் முக்கியமானது. இதில் மிக ஆழமான சத்தியங்கள் அடங்கியுள்ளன. அதை இனி பார்ப்போம்

ஏழாவது வார்த்தை: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி,…

ஆறாவது வார்த்தை: முடிந்தது

யோவான் 19 : 30 “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். இந்த வார்த்தை பிதாவைப் பார்த்துக்…

ஐந்தாவது வார்த்தை: தாகமாயிருக்கிறேன்

யோவான் 19 : 27 “அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.” இயேசு ஒன்பதாம் மணி…

நான்காவது வார்த்தை: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

மத்தேயு 27 : 46 “ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு…

மூன்றாம் வார்த்தை: அதோ, உன் மகன்; அதோ, உன் தாய்

இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன்…

இரண்டாம் வார்த்தை: நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்

இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரோடு கூட இரண்டு கொலை குற்றவாளிகளையும் இரண்டு பக்கத்திலும் அறைந்தார்கள். மத்தேயுவும் மாற்கும் கள்ளன் என்று குறிப்பிடுகின்றனர்…

முதல் வார்த்தை: பிதாவே இவர்களுக்கு மன்னியும்

லூக்கா 23 : 34 “இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” இயேசுசிலுவையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூறிய…