Menu Close

Category: தேவ கரம்

கர்த்தருடைய கரம் மிகவும் வல்லமையுடையது ( 1 நாளா 29 : 22). அந்தக் கரத்தினால் நம்மை ஆசீர்வதிப்பார் (ஆதியாகமம் 48 : 13), அரவணைப்பார், கண்ணீரைத் துடைப்பார் (ஏசாயா 25 : 8), இரட்சிப்பார் (சங்கீதம் 98 : 1, சங்கீதம் 44 : 3), சுகம் கொடுப்பார் (மத்தேயு 8 : 3), விடுதலையளிப்பார் (ஏசாயா 41 : 20), உருவாக்குவார் (சங்கீதம் 95 : 5), தாங்குவார் (சங்கீதம் 18 : 35, ஏசாயா 41 : 10), உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுப்பார் (மத்தேயு 14 : 31), வழிநடத்துவார். (சங்கீதம் 139 : 10), தடைகளை உடைத்து, இக்கட்டுக்கு விலக்கிக் காப்பார் (எஸ்ரா 8 : 31), பகைவர்களைக் கண்டுபிடிப்பார் (சங்கீதம் 21 : 8). சரியான வழியில் நம்மை நடத்தி உன்னதத்தில் உட்கார வைப்பார் (எபேசியர் 2 : 7), பராக்கிரமம் செய்வார் (சங்கீதம் 118 : 16), உயிர்ப்பிப்பார் (மாற்கு 5 : 38 – 42). வெளிப்படுத்தல் 2 : 1 ல் கர்த்தர் தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறார். அவர் தமது கரத்தினால் நம்மை இரட்சிக்கிறார் (சங்கீதம் 138 : 7). கர்த்தருடைய வலது கரம் பலத்தினால் மகத்துவம் நிறைந்து பகைவனை நொறுக்குகிறது என்று யாத்திராகமம் 15 : 6 ல் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்தப் பூமியில் நாம் செய்ய வேண்டியவைகளை அவரது வல்லமையுள்ள கரமும், அவருடைய ராஜ்ஜியத்தில் கொண்டு சேர்க்க மகத்துவமுள்ள கரமும் நமக்கு உதவி செய்கிறது என்பதாகும். இயேசுகிறிஸ்து பூமியை விட்டுப் போகும் கடைசி நேரம் வந்த போது, தமது சீஷர்களை அழைத்துக் கொண்டு பெத்தானியா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்கு இயேசுவை விட்டுப் பிரியும் நேரம் வந்த படியால், இயேசு தன்னுடைய கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார். அந்தக் கரத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இயேசு யவீருவின் மகளை உயிர்ப்பித்தார்

ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:  லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து…

பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பயத்தை இயேசு போக்கினார்

பெரும்பாடுள்ள ஸ்திரீ:  மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு…

சீஷர்களின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்

பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்:  மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில்…

18 வருட கூனியை நிமிரச் செய்தார்

லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும்…