Menu Close

Category: எலியா தீர்க்கதரிசி

எலியா தீர்க்கதரிசி யாரென்று 1 இராஜாக்கள் 17 : 1ல் சுருக்கமாக கீலேயாத்தைச் சேர்ந்த திஸ்பியனாகிய எலியா என்று வேதம் கூறுகிறது. கீலேயாத் என்பது யோர்தானின் கிழக்குக் கரையிலுள்ளது. அங்கு வாழ்ந்த இரண்டரை கோத்திரத்திலிருந்து தோன்றிய ஒருவனாக எலியா இருக்கலாம் என்கின்றனர் திஸ்பி என்றால் மனந்திரும்பச் செய்பவர் என்று பொருள். இஸ்ரவேல் ஜாதியில் எலியா ஒரு விசித்திரமான பக்தியுள்ளவன். எலியா யோவான்ஸ்நானனுக்கு முன்னடையாளமானவன். எலியாவின் நிலை சந்நியாசியைப் போன்றது. தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்தவன். ஜெப வீரனாகத் திகழ்ந்தவன். ஆகாப் ராஜாவின் காலத்திலும் அவருடைய மகனான அகசியா ராஜாவின் காலத்திலும் தீர்க்கதரிசனம் உரைத்தவர்.. தேவ சமூகத்தில் நின்று தேசத்தின் அருவருப்புக்காக நொந்து, வேதனைப்பட்டு ஒரு புயலாக உருவாகி அரியணையை அசைக்கும்படி திடீரென்று ஆகாப் ராஜாவின் முன் தோன்றி, இந்த வருஷங்களிலே மழையும், பனியும் பெய்யாது என்று ஆணையாகச் சவால் விட்டவர்.
அவருடைய வார்த்தை மிகவும் அழுத்தமாக இருந்தது. தேவன் கட்டளையிட வேண்டுமென்று ஜெபித்து கர்த்தர் வானத்தை அடைக்கவில்லை. எலியா தேவனுடைய சித்தத்தை அறிந்து ஊக்கமாய் வேண்டிக்கொண்டு ஒரு போருக்குக் களமிறங்கியவர். (யாக்கோபு 5 : 17, 18) கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் என்று கூறினவர். அவருடைய போர்க்காலங்களில் தேவன் அவருக்குக் காரியங்களை வாய்க்கச் செய்தார். தொடர்ந்து அவருடைய வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தவராகவே இருந்தார். தனது உயிரையும் பணயம் வைத்து ஆன்மீகப் புரட்சி ஒன்றுக்கு ஆயத்தமானவர். தேவனோடு தனித்து உறவாடிய அவரது தவ வாழ்வு தேசத்தை அசைக்கும் வலிமை மிக்க சொற்களாக வெளிப்பட்டது. மரணமடைந்த பையனை உயிர்ப்பிக்க விசுவாசத்துடன் ஜெபித்து உயிரோடெழுப்பினவர்.
விசுவாசத்தினால் தைரியம் உடையவராகத் திகழ்ந்து, பாகால் தீர்க்கதரிசிகளையும் தோப்பு விக்கிரக ஆராதனைக்காரர்களையும் அழைத்து, அவர்களுக்கும், மக்களுக்கும், அரசுக்கும் முன்பாக பகிரங்கமாகச் சவால் விட்டவர்.

ஊக்கமாக ஜெபித்து, பலியின் மீது நெருப்பு இறங்கச் செய்தவர். தேவனோடு பேசினார். தேவனும் அவரோடு பேசினார். தைரியமாக அரசருக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தார். தனது காலத்திற்குப் பின் தனது பணியைத் தொடர தேவன் கூறிய நபரைத் தெரிந்தெடுத்து ஊழியத்திற்காகப் பழக்குவித்தார். தன்னைவிட தான் அபிஷேகித்த எலிசா, அதிகமாக ஊழியம் செய்யப்போவதை அறிந்தும் எலியா பொறாமைப் படவில்லை. உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டாவது நபர் எலியா. முதலாவது நபர் ஏனோக்கு. மகிமையில் காணப்பட்டார். கிறிஸ்துவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். மறுரூப மலையில் இயேசுவுடன் பேசின இரண்டாவது நபராகக் காணப்பட்டார் (மத்தேயு 17 : 3) கர்த்தரின் நாள் வருமுன்னே எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேனென்று மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group”இல் சேரவும்

வானத்திலிருந்து அக்கினியை இறக்கினான்

இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்ததால், இஸ்ரவேலின் ராஜா மிருகங்களுக்கு ஆகாரம் தேடுவதற்காகத், தானும் தன்னுடைய அரண்மனை விசாரிப்புக்காரனான ஓபதியாவும் வெவ்வேறு திசைகளில்…

சாறிபாத் விதவையின் மகனை எலியா உயிரோடு எழுப்பினான்

கர்த்தர் சாறிபாத் விதவைக்கு எலியா தீர்க்கதரிசியின் மூலமாக மாவும், எண்ணெயும் குறைந்து போகாமல் இருக்கும்படி ஆசீர்வதித்த அதே வேளையில், அவளுக்குத் துக்கமும், துயரமும்…

சாறிபாத் விதவைக்கு எலியா செய்த அற்புதம்

எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள்…

எலியாவின் ஜெபம் கேட்டு மழை பெய்யாமல் வானம் அடைக்கப்பட்டது

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் தகப்பனான உம்ரி வலிமைமிக்க அரசர்களில் ஒருவனாக வரலாற்றில் கருதப்பட்டவர். ஆனால் வேதாகமத்தில் அவர் பாராட்டப்படவில்லை. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச்…