Menu Close

இயேசு ராஜா

யூதருக்கு ராஜா:

இயேசு குழந்தையாயிருக்கும் போது பார்க்க வந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.(மத் 2 : 2) .தாவீதும் கோராகின் புத்திரரும் இயேசுவை மகிமையின் ராஜா என்றும், பூமியனைத்திற்கும் ராஜா என்றும் போற்றினர் (சங்கீதம் 24 : 9, 47 : 7 ) ஏசாயா தீர்க்கதரிசி இயேசு நீதியுள்ள ராஜாவாக இருந்து நீதியாக அரசாளுவார் என்றார் (ஏசாயா 32 : 1) வெளிப்படுத்தலில் ஜெயங்கொண்டவர்கள் பரிசுத்தவான்களின் ராஜாவே என்று வாழ்த்தினர் (வெளிபடுத்தல் 15 : 3 ) அதே வெளிப்படுத்தலில் யோவான் அப்போஸ்தலன் ராஜாதிராஜா என்னும் நாமம் இயேசுவின் வஸ்திரத்தின் மேலும், தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார் (வெளி 19 : 16) நாத்தான்வேல் இயேசுவை இஸ்ரவேலின் ராஜா என்று அறிவித்தான் (யோ 1 : 49 ) மனித வரலாற்றை இரண்டாகப் பிரித்த நித்தியராஜா இயேசு ஒருவர் மட்டுமே.

Related Posts