Menu Close

இயேசு நல்ல மேய்ப்பன்

யோவான் 10 : 14, 15, 16 “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”

இயேசு தம்மை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நல்ல மேய்ப்பன் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். நல்ல மேய்ப்பராகிய இயேசு தமது ஆடுகளுக்கு மேய்ப்பராகவும், காவலராகவும் மட்டுமல்லாமல், ஆடுகளுக்காகத் தனது உயிரையும் தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அவர் தமது ஆடுகளை அறிந்திருக்கிறார், அறியப்பட்டுமிருக்கிறார். சிதறியிருக்கும் ஆடுகளை, மந்தையில் இல்லாத ஆடுகளை, தமது தொழுவத்தில் சேர்க்க விரும்புகிறார். நல்ல மேய்ப்பனான இயேசு அந்நிய மேய்ப்பனையும், ஓநாய்களையும் விரட்டுகிறார். தம் ஆடுகளை தம்முடைய கரங்களினால் மறைத்து, பாதுகாத்து பிதாவின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

Related Posts