Menu Close

Category: கண்ணீரை காண்கின்ற தேவன், கண்ணீரை களிப்பாக்குவார்

கண்ணீரைக் களிப்பாக்குகிறவர் என்ற தலைப்பின் மூலம் தேவன் கண்ணீரைக் களிப்பாக்கின சிலரைப் பற்றியும் அவர்களுக்குச் செய்த செயல்களைப் பற்றியும் பார்க்கலாம். இவ்வுலகில் வாழும் அனைவரும் ஏதோ ஒரு காரியத்திற்காகப் பாடுகளுக்குட்பட்டு, கவலைகளுக்குட் பட்டு ஏதாவது ஒரு நேரத்தில் கண்ணீர் வடிக்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போது அழுகின்றது. அதேபோல் யார் மரித்தாலும் மரித்தவர் களைச் சுற்றி இருக்கிறவர்கள் அழுகிறார்கள். வேதத்திலிலுள்ள பரிசுத்த வான்கள் அனைவரும் கண்ணீரின் பாதையில் நடந்தவர்கள் தான்.நம் ஒவ்வொருவருடைய கண்ணீரையும் காண்பவர் இயேசு. அந்தக் கண்ணீ ரைக் களிப்பாக்குகிறவர் இயேசு. அதைக் கணக்கில் வைப்பவர் இயேசு. இயேசுவை நோக்கிக் கண்ணீரோடு ஜெபிக்கும் போது அதற்கு நிச்சய மாகப் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக வேதத்தில் அநேக எடுத்துக் காட்டுகளைப் பார்க்க முடியும். ஆசீர்வாதங்களையும், ஆவியின் வரங்க ளையும் கண்ணீரின் ஜெபத்தினால்தான் நாம் பெற்றுக்கொள்ள முடியும். பிதாவாகிய தேவனோ, ஆவியானவரோ ,தேவதூதர்களோ கண்ணீர் சிந்தினதை வேதத்தில் எங்கும் பார்க்க முடியாது. இயேசுவா னவர் இந்த பூமிக்கு மனுஷரூபமெடுத்து வந்தபோது கண்ணீர் சிந்தினார், கண்ணீரோடு ஜெபித்தார் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

தகப்பன் தன்னுடைய அவிசுவாசம் நீங்க வடித்த கண்ணீர்: (மத்தேயு 17 : 14 – 18; மாற்கு 9 : 17 – 27; லூக்கா 9 : 38 – 42)

சந்திரரோக வியாதி: மத்தேயு 17: 14 – 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர்…

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: (ஏசாயா 38)

எசேக்கியாராஜா: எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை…

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: (லூக்கா 7 : 11 – 16)

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும்…

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: (லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75)

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 30 : 1 – 18)

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில்…

குழந்தைக்காக அன்னாள் வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 1 : 1 – 2 : 21)

எல்க்கானாவின் குடும்பம்: எப்பிராயீம் மலை தேசத்தில் உள்ள ராமதாயிம் என்னும் ஊரில் எல்க் கானா என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு இரண்டு…

ஆகார் தன் மகனுக்காக வடித்த கண்ணீர்: (ஆதியாகமம் 21 : 8 – 19)

ஆகார்: எகிப்து தேசத்தில் ஆபிராமும், சாராயும் வாழ்ந்த போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்த அடிமைப்பெண் ஆகார். கானான் தேசத்தில் பஞ்சம்…

மரியாள் இயேசுவைப் பார்த்து வடித்த கண்ணீர்: (யோவான் 20 : 1 – 18)

மகதலேனா மரியாள்: மரியாள் என்பவள் மகதலேனா என்ற பட்டணத்தை சேர்ந்தவள். இந்தப் பட்டணம் கலிலேயா கடற்கரையின் மேற்கு கரையோரம் உள்ளது. இயேசு தன்னுடைய…

இயேசு லாசருவின் மரணத்தில் வடித்த கண்ணீர்: யோவான் 11 : 1 – 45

மரத்தாள், மரியாளிடமிருந்து வந்த செய்தி: யோவான் 11 : 3 “ அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று…

இயேசு எருசலேமின் அழிவை நினைத்து வடித்த கண்ணீர் (லூக்கா 19 : 41)

லூக்கா 19 : 41 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,” இயேசு எருசலேவுக்கு சமீபமாக வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்துக்…