Menu Close

வருங்காலத்தில் இயேசு

வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்தேயு 28 : 18), சபையை உலகினின்று எடுத்துக் கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1 தெசலோனிக்கேயர் 4 : 14 ,1). இதை இரகசிய வருகை என்கிறோம். இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடும், தூதரோடும் பூமிக்கு வருவார் (சகரியா 14 : 1 – 9, மத்தேயு 24 : 30, 31, வெளிப்படுத்தல் 19 : 11- 21). தமது பரிசுத்தவான்க ளோடு சேர்ந்து ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அரசாளுவார் (வெளிப்ப டுத்தல் 20 : 4, 6). அதன் பின்னர் புதிய பூமியில் பிதாவுடன் இணைந்து சிங்காசனத்தில் வீற்றிருந்து என்றென்றுமாக அரசாளுவார் (வெளிப்படுத்தல் 22: 11). அவருடைய பரிசுத்தவான்களும் அவரோடு அரசாளுவார்கள் (தானியேல் 7 :18 ,27). மேலும் நியாயாதிபதியாக யாவரையும் கிறிஸ்து நியாயம் தீர்ப்பார் (யோவான் 5 : 27, 30, அப்போஸ்தலர் 10 : 42, ரோமர் 14 :10 2 கொரிந்தியர் 5 : 10, 2 தீமோத்தேயு 4;1). கிறிஸ்துவினுடையவர்களும் அவருடன் சேர்ந்து நியாயம் தீர்ப்பார்கள் (1கொரிந்தியர் 6 :3 ,வெளிப்படுத்தல் 20 : 4).

Related Posts