Menu Close

இயேசு கிறிஸ்து தேவனாய் இருக்கிறார்

புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் ஆண்டவரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசாயா 9 : 6 , 7, யோவான் 1 : 1 -2, 20 : 28, யோவான் 5 : 20, அப்போஸ்தலர் 20 : 28 ரோமர் 9 : 5, தீத்து 2 : 13 எபிரேயர் 1 :8 – 9 என்ற பகுதிகளில் காணலாம். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டாரென்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறும் தேவ பக்தியின் ரகசியங்களில் ஒன்றாகும் (1 தீமோத்தேயு 3 : 16 ). ஆவியானவரும் குமாரனே தேவன் என்று அழைத்தாரென்று எபிரேயர் 1 : 9 ல் காணலாம். இதனால் பிதா தேவனாயிருக்கிறார், குமாரன் தேவனாயிருக்கிறார், ஆவியானவரும் தேவனாயிருக்கிறார் (அபோஸ்தலர் 5 : 3, 4 , 2 கொரிந்தியர் 3 :17) “ என் தேவனே என் தேவனே” என்று இயேசு பிதாவை நோக்கிக் கூப்பிட்டபோது (மாற்கு 15 : 34) அவர் உலகத்தின் பாவங்களை சுமந்த நிலையில் (1 :29, 1 பேதுரு 2 : 24 ) நமக்காகப் பாவமாக்கப்பட்ட நிலையில் (2 கொரிந்தியர் 5 : 21) நம்முடைய பிரதிநிதியாக அவ்வாறு கூறினார். அவ்வாறு கூறுவதற்கு சற்று முன்பும் சற்று பின்பும் பிதாவே என்று அழைத்தார் (லூக்கா 23 : 34 – 46).

Related Posts