தேவனிடத்திலிருந்த “வார்த்தை’ தேவனாயிருந்தார் (யோவான் 1 :1 ,2 ). எனவே பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள். இயேசு தேவனைத் தமது பிதா என்று கூறியதை யோவான் 5 :17 ,18ல் பார்க்கிறோம். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றும் (யோவான் 10 : 30), என்னை அறிந்திருப்பீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் என்றும் (யோவான் 14 : 7), என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றும் (யோவான் 14 : 8 -11) கொடுத்திருப்பதால், இயேசு பிதாவுக்குச் சமமானவரென்பதை உறுதிப்படுத்துகின்றன. பிதாவினுடையவைகள் யாவும் தம்முடையவைகள் என்றும், தம்முடையவைகள் யாவும் பிதாவினுடையவைகள் என்றும் (யோவான் 16 : 15 ,17 : 10)ல் இயேசு கூறினார். சமமாயிருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு கூற முடியும். பவுல் கிறிஸ்து தேவனுக்குச் சமமானவர் என்பதை பிலிப்பியர் 2 : 6 ல் கூறினார். பிதாவான வர் அல்பாவும் ஒமேகாவுமாக இருப்பது போன்று, குமாரனும் அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறார் (வெளிப்படுதல் 1 : 8 1:உடன் 1 : 11 -13). பிதாவும் ஆட்டுக்குட்டியானவரும் புதிய எருசலேமின் ஆலயமாக இருக்கின்றனர் .(வெளிப்படுத்தல் 21 : 22) ஒரு சிங்காசனத்தில் பிதாவும் குமாரனும் உட்கார்ந்திருப்பதால் (வெளிப்படுத்தல் 22 :1) இருவரும் சமமானவர்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது. ஊழியர்களிடம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் இணைந்து செயல்படுகின்றனர்.