Menu Close

Category: ஏழு முத்திரைகள்

வேதத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் முத்திரை போடுவது குறிப்பிடப் படுகிறது. ஒரு பொருளின்மேல் அலலது ஒரு நபரின் மேல் முத்திரை போடுவது, அந்தப் பொருளின் அல்லது அந்த நபரின் சொந்தக்காரர் யாரென்பதையும், அதைப் பாதுகாக்கும் பொறுப்பு யாருடையது என்பதையும் அறிவிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். சில முத்திரைகள் ராஜாக்களின் அதிகாரத்தை அறிவிக்கிறது (1இராஜாக்கள் 21 : 8, எஸ்தர் 8 : 8). மற்றவர்கள் அதில் தலையிடுவதைத் தடுக்கிறது (எரேமியா 32 : 10, மத்தேயு 27 : 66). மனிதர்கள் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை உறுதிப்படுத் துகிறது (நெகேமியா 9 : 38, ஏசாயா 8 : 16). ஆபிரகாமின் விருத்தசேதனம் அவர் விசுவாசத்தினாலே நீதிக்கு அடையாளமான முத்திரை என்று பவுல் ரோமர் 4 : 11 ல் குறிப்பிடுகிறார். இரட்சிப்பின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்ட நாம் பரிசுத்த ஆவியினால் அவருக்குள் முத்திரையைப் பெறுகிறோம் (எபேசியர் 1 : 13). 

கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், வெளிப்படையான வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் சில நியாயத்தீர்ப்புகளைக் காணலாம். அவை முத்திரை, எக்காளங்கள், கோபக்கலசங்கள் ஆகியன. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்வன அல்ல. இவைகளில் ஒன்று முடியும் போது மற்றொன்று தொடங்குகிறது. இவைகள் கிறிஸ்துவின் வருகைக்கு முன் உலகை நியாயந்தீர்த்து, தேவ அரசாட்சிக்கு காலம் அமைப்பவையாக அமைகின்றன. முத்திரைகள் உடைக்கும்போது ஜீவன்கள் நியாயத்தீர்ப்பை அளிக்கின்றன. தேவனின் அரசு காரியங்களை நடத்துபவனாக ஜீவன்கள் விளங்குகின்றன. முதல் நான்கு முத்திரைகளும் உபத்திரவ கால அரசுச் சூழலையும், ஐந்தாம் முத்திரை ஆன்மீக உபத்திரவத்தையும், ஆறாம் முத்திரை இயற்கை அழிவையும் ஏழாம் முத்திரையானது அடுத்த நிகழ்ச்சியின் ஆயத்தம் மற்றும் இயற்கை அழிவின் காரணத்தையும் வெளிப்படுத்துகின்றன.

ஏழாவது முத்திரை – வெளிப்படுத்தல் 8:1

1.பரலோகத்தில் காணப்பட்ட அமைதி: வெளிப்படுத்தல் 8 : 1 “ அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.…

ஆறாவது முத்திரை – வெளிப்படுத்தல் 6:12-14

பூமி, சூரியன், சந்திரனில் மாற்றம்: வெளிப்படுத்தல் 6 : 12 “ அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது;…

ஐந்தாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:9-11

பலிபீடத்திலிருந்து கொல்லப்பட்ட ஆத்மாக்களின் சத்தம்: வெளிப்படுத்தல் 6 : 9 “ அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும்…

மூன்றாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:5-6

கறுப்புக் குதிரையில் தராசுடன் புறப்பட்டான்: வெளிப்படுத்தல் 6 : 5 “ அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார்…

இரண்டாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:3-4

இரண்டாம் ஜீவன் யோவானைப் பார்க்க அழைத்தது: வெளிப்படுத்தல் 6 : 3 “அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார்…

முதலாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:1-2

யோவானைப் பார்க்கச் சத்தமாய் அழைத்த ஜீவன்:  வெளிப்படுத்தல் 6 : 1 “ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில்…