Menu Close

இக்காலத்தில் இயேசு கிறிஸ்து

கிறிஸ்து கேட்கிறவர்களுக்குப் பிதா அருளும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருகிறார் (லூக்கா 11: 13, மத்தேயு 3 :11, அப்போஸ்தலர் 2 : 32 33). பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் யாவரும் காணும்படியாக கிறிஸ்து வீற்றிருக்கிறார் (மாற்கு 16 : 19, ரோமர் 8 : 34, எபேசியர் 1 : 3, 8 : 1, 10 : 12, 12 : 2). நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் (ரோமர் 8: 34 எபிரேயர் 7 : 25, 1 யோவான் 2 :1 ,2). மக்களின் கண்களுக்குத் தெரியாதவாறு உலகமெங்கும் கிறிஸ்த பிரசன்னமாகியிருக்கிறார் (மத்தேயு 28 : 20) அவருடைய நாமத்தினால் மக்கள் கூடி வரும் இடங்களில் அவர்கள் நடுவிலிருக்கிறார். (மத்தேயு 18 : 20) அவரை ஏற்றுக் கொள்கிறவர்களின் இருதயங்களில் வாசமாயிருக்கிறார் (எபேசியர் 3 : 17).

Related Posts