இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம் பண்ணப்பட்டு பெயரிடப்பட்டார் (லூக்கா 2: 21). தனது பெற்றோருடன் பயணம் செய்தார் (லூக்கா 2: 39, 41 – 42, 51). தனது வளர்ப்புத் தந்தையான யோசேப்புக்கும், தாயாகிய மரியாளுக்கும் கீழ்ப்படித்திருந்தார் (லூக்கா 2: 51). வளர்ந்தார் (லூக்கா 2: 40, 52). ஞானஸ்தானம் பெற்றார் (லூக்கா 3: 21). மற்ற மனிதரைப் போன்ற சரீரம் (மத்தேயு 26: 12), ஆத்துமா (மத்தேயு 26 :38), ஆவி (லூக்கா 23 :46) இருந்தன. அவருக்குப் பசி இருந்தது (மத்தேயு 4 :2). தாகம் இருந்தது (யோவான் 19: 28.) அவர் விசனமடைந்தார், கோபமடைந்தார் ( மாற்கு 3 ; 5). இளைப்படைந்தார் (யோவான் 4 ;6). தூங்கினார் (மாற்கு 4 :38). களிகூர்ந்தார் (லூக்கா 10 : 21). வேர்வை சிந்தினார் லூக்கா 22 :44). கண்ணீர் விட்டார் லூக்கா 19: 41). அவருக்கு இயேசு (மத்தேயு 1: 21), மனுஷகுமாரன் (லூக்கா 19 :10), தாவீதின் குமாரன் (மத்தேயு 1 :11,) நசரேயனாகிய இயேசு (அப்போஸ்தலர் 2 :22 ) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே இயேசு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்தார்.