பஸ்கா பண்டிகை கொண்டாட யோசேப்பும், குடும்பமும் எருசலேமுக்குச் சென்றனர். பண்டிகை முடிந்ததும் யோசேப்பும், மரியாளும் ஊர் திரும்பினர். ஆனால் இயேசுவைக் காணாததால் இருவரும் திரும்ப எருசலேமுக்கு வந்து மூன்று நாட்கள் கழித்து ஆலயத்தில் போதகர் நடுவில் இயேசு அமர்ந்து அவர்கள் பேசுகிறதைக் கேட்பதும், அவர்களிடம் வினாக்கள் எழுப்புகிறதையும் கண்டார்கள். இயேசு பேசுவதைக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியைப் பார்த்து பிரமித்தனர். யோசேப்பும், மரியாளும் அங்கு நடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். மரியாள் இயேசுவைப் பார்த்து,
- “மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.“ அதற்கு இயேசு
- “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார்.”
இயேசு சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு இயேசு அவர்களுடன் நாசரேத்துக்குச் சென்று பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். இயேசு ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர்தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் – லூக் 2:41- 52