Menu Close

இயேசு சிறுவர்களை ஆசீர்வதித்தது – மத்தேயு 19 : 13 – 15 மாற்கு 10 : 13 – 16 லூக்கா 18 : 15 – 17

சிறுபிள்ளைகளை இயேசு தொடும்படி அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள்
அவர்களை அதட்டினர். இயேசு அதைப்பார்த்து விசனமடைந்து “சிறுபிள்ளைகள்
என்னிடத்திற்கு வருவதற்கு இடங் கொடுங்கள் அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். மேலும் இயேசு சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சிறுபிள்ளைகளிடம் தாழ்மை, உண்மையை ஏற்றுக்கொள்ளும் பண்பு, முற்றிலும் கீழ்படிதல், ஆகிய பண்புகளைக் காணலாம். அதேபோல் தாழ்மையாக, எளிமையாக, முழுநம்பிக்கையுடன், முழுமனதுடன் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்
கொண்டு அதன் மூலம் பாவத்திலிருந்து விலகி, தேவனை பரலோக பிதா என்று ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்பதாகும். இயேசு தன்னிடம் வந்த சிறுபிள்ளைகளை அணைத்துக் கொண்டு தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.

Related Posts