Menu Close

இயேசு அவயங்களுக்கு கொடுத்த உபதேசம்

  1. இருதயம்: மத்தேயு 5:28  “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரஞ்செய்தாயிற்று.”
  2. வலதுகண்: மத்தேயு 5:29 “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு
  3. வலது கை: மத்தேயு 5:30 உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத்தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவது நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.”
  4. சிரசு: மத்தேயு 5:36 “உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.”
  5. கண் பல்: மத்தேயு 5:38 “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.”
  6. வலது கன்னம்,  இடது கன்னம்: மத்தேயு 5:39 “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் ,அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.”
  7. முகம்: மத்தேயு 5:42 “உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.”  8. வலதுகை, இடதுகை: மத்தேயு 6:3 “உன் வலதுகை கொடுக்கிறதை இடதுகை அறியாதிருக்கக்கடவது.”
  8. தலை, முகம்: மத்தேயு 6:17 “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு.”
  9. கண், சரீரம்: மத்தேயு 6:22,23 “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.”
  10. ஜீவன் சரீரம்: மத்தேயு 6:25,26 “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”
  11. கண்: மத்தேயு 7:3-5 “ நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”
    “இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?”
    “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்.”
  12. உள்ளம்: மத்தேயு 7:15 “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.”

Related Posts