Menu Close

இளைப்பாறுதல் பற்றி இயேசு – மத்தேயு 11 : 28 – 30

இன்றைக்கும் இயேசு யாவரையும் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் இளைப் பாறுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் செல்ல வேண்டும். அவரது கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும். அவரது நுகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்வது மிகவும் கடினமானது என்று பலர் கருதுகின்றனர்.
இது தவறு. அவரைப் பின்பற்றுவது அவருடைய கிருபையால் மிகவும் எளிதானதும், மிகவும் மகிழ்ச்சியானதும் ஆகும்.

துன்பங்களினாலும், தான் செய்த பாவங்களினாலும் கவலைப்படுகிறவர்கள் இயேசுவிடம் வந்தால், அவரது கட்டளைக்குக் கீழ்படிந்தால், அவருடைய ஊழியக்காரராக மாறினால், இயேசு உங்களுக்கு அளவுகடந்த பாரங்களையும், கவலைகளையும் விலக்கி ஓய்வையும், சமாதானத்தையும் தர, தனது பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். எத்தனை பெரிய சோதனைகளும், துன்பங்களும், கவலைகளும், வந்தாலும் தேவனுடைய கிருபை, உதவி அவர்களைத் தாங்கும்.

Related Posts