Menu Close

மனந்திரும்பாத நகரங்கள் பற்றி இயேசு – மத்தேயு 11 : 21 – 23 லூக்கா 10 : 13 – 15

இயேசுவினுடைய பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியால் அவர்களைக் கடிந்து கொண்டார். கோராசினையும், பெத்சாயிதாவையும்
நோக்கி உங்களுக்கு செய்யப்பட பலத்த செய்கைகள் தீருவிலும், சீதோனிலும் செய்யப் பட்டிருந்தால் அப்பொழுதே அவர்கள் இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்து மனந்திரும்பியிருப்பார்கள் என்றார். நியாயத்தீர்ப்பு நாளன்று கோராசீனுக்கும், பெத்சாயிதாவுக்கும் நேரிடுவதைப் பார்க்கிலும் தீருவுக்கும், சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்றார்.

அதேபோல் கப்பர்நாகூமிற்கு அண்மையாயிருந்த கானாவூரில் தான் கர்த்தர் தமது முதல் அற்புதத்தைச் செய்தார் – யோவான் 2 : 1 – 12 பல அற்புதங்கள் அங்கு செய்தபோதிலும்
அவர்கள் பரலோக ராஜ்ஜியத்தை நிராகரித்தனர். எனவேதான் இயேசு கோபத்தில் வானபரியந்தம் உயர்த்தப்பட்டாலும், பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்றும் அங்கு செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இந்நாள் வரைக்கும் நீடித்திருக்கும் என்றும் கூறினார்.   

Related Posts