இயேசு தூக்கமயக்கத்திலிருந்த சீஷரோடு பேசுகையில் யூதாஸ் பிரதான ஆசாரியரும், ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்களோடு பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள். யூதாஸ் இயேசுவை முத்தத்தால் காட்டிக் கொடுத்தான். ஜனங்கள் இயேசுவை நெருங்கியபோது பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை பேதுரு வெட்டினான். போர்சேவகர் இயேசுவைப் பிடித்தனர். அப்போது சீசர்கள் அவரை விட்டு ஓடிப்போனார்கள் – மத்தேயு 26 : 47 – 56