Menu Close

அடையாளத்தைத் தேடுகிறவர்களுக்கு கிறிஸ்துவின் பதில்: மத்தேயு 12:38-41 லூக்கா 11:29-32

வேதபாரகரிலும், பரிச்செரியரிலும் சிலர் இயேசுவை நோக்கி “போதகரே உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்” என்றனர். இவர்கள் இயேசுவின் அற்புதங்களையும், தூய்மையான வாழ்க்கையையும், மிகச்சிறந்த கருத்துக்களையும் அறிந்திருந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் அடையாளம் கேட்பது அவர்களின் அவிசுவாசத்தையும், உண்மையை ஏற்க மறுக்கும் பண்பையும் காட்டுகிறது. இயேசு அவர்களிடம் “யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை என்றார். மேலும் யோனா இரவும், பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல மனுஷ குமாரனும் இரவும், பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்றார்.
ஒரு பெரிய மீனின் வயிற்றில் யோனா தீர்க்கதரிசி மூன்று நாட்கள் இருந்ததை நம்பாதவர்களும், அதற்கு எதிராக போதிப்பவர்களும் உண்டு. வேதத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை நம்ப மறுப்பவர்களும், மாறுபாடான சிந்தனையுள்ளவர்களும், மறுத்துப் பேசுபவர்களும் அடிப்படை விசுவாசமில்லாதவர்கள். யோனாவின் வரலாறு உண்மை என்பதை இயேசுவின் இவ்வார்த்தைகள் நிலையுறுத்துகின்றன.

Related Posts