யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், சகரியா என்ற ஆசாரியர் கர்த்தருடைய ஆலயத்தில் தூபங்காட்டுகிறவராய் இருந்தார். ஆரோனின் வம்சத்தில் பிறந்த அவன் மனைவியின் பெயர் எலிசபெத். தூபங்காட்டுகிற வேளையில் ஆலயத்திற்கு வெளியே ஜனங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒரு தூதன் தோன்றியதைப் பார்த்த சகரியா மிகவும் பயந்தார். அப்பொழுது தூதன் “அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும், அவன் எப்படி இருப்பான் என்றும் கூறினான். அவைகள் என்னவென்றால்
- உன் மனைவி ஒரு குமாரனைப் பெறுவாள். அவளுக்கு யோவான் என்று பெயரிடு.
- அந்தக் குழந்தையின் பிறப்பின் நிமித்தம் உனக்கும், அநேகருக்கும் சந்தோஷம் உண்டாகும்.
- அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பான்.
- திராட்சரசமும் மதுவும் குடியான்.
- அவன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பட்டிருப்பான்.
- அவன் அநேக ஜனங்களை கர்த்தரிடம் திருப்புவான்.
- அவன் பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளினிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புவான்.
- உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்துவான்.
- அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய், கர்த்தருக்கு முன்னே நடப்பான் – லூக் 1:13-17
சகரியாவும் எலிசபெத்தும் முதிர்வயதானவர்கள் ஆதலால் தூதன் கூறியதைக் குறித்து சந்தேகித்தார். எனவே அங்கு நின்ற காபிரியேல் என்னும் தூதன் “நீ இவைகளை விசுவாசியாதபடியால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் “ என்றான் – லூக் 1:20 அந்த வார்த்தையின்படி எலிசபெத் கருவுற்று ஐந்து மாதங்கள் வரை வெளியே வராமலிருந்தாள்.
காபிரியேல் தூதன் நாசரேத்திலிலுள்ள மரியாள் என்ற கன்னியிடம் சென்று அவளை வாழ்த்தி, “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், உன் இனத்தாராகிய எலிசபெத்தும் முதிர்வயதிலே கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்றும், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் என்றும், தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்றும் கூறினான். மரியாள் உடனே எலிசபெத்தை சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தாள். எலிசபெத் மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டதும் அவள் வயிற்றிலிலுள்ள பிள்ளை துள்ளிற்று – லூக் 1:5-41 எலிசபெத் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டு
லூக் 1:42- 43,45
- “எலிசபெத்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.”
- “என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.”
- “விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.”
காலம் நிறைவெறியபோது எலிசபெத் ஒரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு யோவான் என்று பெயரிட்டனர். உடனே சகரியாவின் வாய் திறக்கப்பட்டு அவருடைய நாவு கட்டவிழ்க்கப்பட்டது.