ஒரு ஓய்வுநாளிலே பரிச்சேயனின் தலைவன் ஒருவன் வீட்டில் போஜனம் பண்ண இயேசு போயிருந்த பொழுது நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் இயேசுவுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான். இயேசு அவனை என்ன செய்யப் போகிறார் என்று ஜனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு நியாயசாஸ்திரிகளையும், பரிச்சேயரையும் பார்த்து “ஓய்வுநாளில் சொஸ்தமாகிறது நியாயமா?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதில் ஏதும் கூறாமல் பேசாமலிருந்தனர். இயேசு அவனை அழைத்து குணப்படுத்தி அனுப்பினார். பின் அவர்களை நோக்கி இயேசு “உங்களில் ஒருவனுடைய எருதாவது, கழுதையாவது துரவில் விழுந்தால் அதைத் தூக்கி விடமாட்டீர்களோ?” என்று கேட்டார். அவர்களுக்கு அதற்கு பதில் கூற முடியாமல் போயிற்று.