மகா உபத்திரவ காலத்திற்குப் பின் கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து தமது
ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன் இந்த செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் பிரிக்கும் நியாயத்தீர்ப்பு நடக்கும் – தானி 7 : 9 – 14 வெளி 5 : 10 19 : 11 – 20 : 4 கிறிஸ்துவின் வருகையின் போது உலகிலிருக்கும் இரட்சிக்கப்பட்டவர்களும், பாவிகளும் உபத்திரவ காலத்தில் வாழ்ந்து தப்பினவர்களும் ஒன்றாகக் கலந்து காணப்படுவார்கள். நியாயத்தீர்ப்பில் அக்கிரமக்காரரும், நீதிமான்களும் தனித்தனியே பிரிக்கப்படுவர் — 25 : 32, 33
நியாயத்தீர்ப்பு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள், துன்பங்களை அனுபவிப்போர் ஆகியோருக்கு வெளிப்படையாக செய்யப்பட அன்பு, இரக்கம் என்ற உணர்ச்சிக்குட்பட்ட நற்கிரியைகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். இவர்கள் கிறிஸ்துவின் வலதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அக்கிரமக்காரன் கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க அனுமதி
க்கப்படமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு நித்திய தண்டனை வழங்கப்படும் – 25 : 41,
46 வெளி 14 : 11 நீதிமான்கள் நித்தியஜீவனை சுதந்தரித்துக் கொள்வார்கள். தேவனுடைய ராஜ்ஜியம் அவர்களுக்குரியது.
பசி, தாகம், ஆடையின்மை, அன்னியனாயிருத்தல் நோய், சிறை வைக்கப்படுதல் ஆகியவற்றில் வாடும் கிறிஸ்தவ சகோதரனுக்கு உதவுவது நமது கடமை. இப்படிப்பட்ட வர்களுக்கு உதவி செய்யாவிடில் தமக்கும் செய்யாததாகக் கர்த்தர் கூறுகிறார். நரகம் சாத்தானுக்கும் தூதர்களுக்குமே ஆயத்தம் பண்ணப்பட்டது. ஆனால் மனிதர் பாவங்களில் ஈடுபடுவதாலும், இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாததாலும் நித்தியஆக்கினையை அடைகின்றனர்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில் நியாயத் தீர்ப்பில் நாம் நிற்கும் போது தண்டனை பெறாமல் இருக்க நம்மை நாமே ஆயத்தப்படுத்துவோமாக.