Menu Close

கால் கழுவுதல் பற்றி இயேசு – யோவான் 13 : 4, 5, 14, 15

இந்தக்காட்சி இயேசுவின் வாழ்க்கையில் கடைசி இரவு அன்று நடந்தது. இயேசு இதைச் செய்ததற்குக் காரணம்

1. சீஷர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்று அவர் களுக்குக் காண்பிப்பதற்காக

2. சிலுவையில் தன்னை தியாகபலியாக ஒப்புக் கொடுப்பதற்கு முன்னறிவிப்பாக   

3. சீஷர்களுக்குள் தாங்கள் பெரியவர்களாக வேண்டுமென்ற ஆசை இருந்ததால் அவர்கள் ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் பணிவிடை செய்ய வேண்டும்
என்ற உண்மையை அவர்களுக்குப் போதிப்பதற்காக இவ்வாறு செய்தார்.

ஒரு மனிதனிடம் ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவன் பெருமை கொள்வான். இயேசுவோ பிதா தன்னிடத்தில் அத்தனையும் ஒப்புகொடுத்த பின்னும் தாழ்மையைக் காண்பித்தார். உங்களிடம் வேலை பார்க்கிறவர்கள், உங்கள் குடும்பத்திலி லுள்ளவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று சிந்தியுங்கள். பிறருடைய கால்களை
கழுவுவதற்கு தயாராக இல்லாத மனிதன் தேவனுடைய பணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது.

“நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை”
என்று இயேசு கூறுவது சிலுவையில் இயேசு அறையப்பட்டதன் மூலம் பாவத்திலிருந்து ஆவிக்குரிய கழுவப்படுதலைக் குறிக்கிறது. இதனாலேயல்லாமல் யாரும் கிறிஸ்துவுக்குச் சொந்தமாக முடியாது – 1யோ  1: 7

Related Posts