இயேசு சென்று கொண்டிருக்கும்போது ஜனக்கூட்டத்தில் ஒருவன் தனக்குப் பாகம்
பிரித்துத் தரும்படி கேட்டான். அப்பொழுது இயேசு அவர்களிடம் பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கச் சொல்லி ஒரு உவமையைக் கூறினார். ஒரு ஐசுவரியவானுக்குத் தன்னுடைய நிலம் நன்றாய் விளைந்ததால் தானியங்களை எங்கே சேர்த்து வைப்பேன் என்று நினைத்து “என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாய் கட்டி அதில் அவைகளை சேர்த்து வைப்பேன் என்றும், நீ இளைப்பாறிப் புசித்து,குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். இயேசு அவனை நோக்கி “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த ராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார்.
இதில் தன் உணவுக்காகச் சேர்த்து வைத்தவன் ஆத்துமாவுக்காகச் சேர்த்து
வைத்ததாகக் கூறுவது அம்மனிதனின் மன நிலையைக் காட்டுகிறது. உணவுப்பொருள் இவ்வுலகத்துக்குரியது, சரீரத்துக்குரிய ஆத்துமாவோ அழியாதது. அழியாத அந்த ஆத்துமா
வுக்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆத்துமாவும் ஆவியும் நரகத்திற்குச் செல்லாத
படி நீரினாலும், ஆவியினாலும் பிறக்கும் அனுபவத்தை அடைய வேண்டும் – யோவான் 3 : 3 – 5
தேவன் அந்த மனிதனை முட்டாள் என்றழைத்தற்குக் காரணம் 1. அவன் இம்மைக்
குரிய தேவைகளைப் பற்றியே சிந்தித்தான். மற்றவைகளைப் பற்றி சிந்திக்கவில்லை. 2. பரலோகத்தில் செல்வத்தை சேர்த்து வைப்பதைக் குறித்து அம்மனிதன் அக்கறை கொள்ள வில்லை. 3. தனக்கு இத்தனை விளைச்சலைக் கொடுத்த தேவனுக்கு நன்றி சொல்லவில்லை.
4. தானியங்கள் பல ஆண்டுகள் பத்திரமாக இருக்குமென்றெண்ணினான். 5. தான் ஒருநாள் இவ்வுலகை விட்டுப் போக வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. 6. தனது
மரணத்துக்குப் பின் தனது நிலை என்ன என்பதையும் தான் சேமித்தவைகள் என்னவாகும் என்பதையும் சிந்திக்கவில்லை.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில் எதையும் இவ்வுலகத்திற்கு ஏற்றபடி பார்க்காமல் பரலோகத் திற்கேற்ற கண்ணோட்டத்தில் பார்த்து தேவனுக்கென்று பாடுபட உற்சாகமாயிருப்போமாக.