Menu Close

நானே நல்ல மேய்ப்பன் – யோவான் 10 : 11

இயேசு என்ற பரலோக ராஜா, மகிமையின் ராஜா, யூத குலத்தில் தோன்றிய ராஜா, ராஜாதி ராஜா, அனாதைகளின் அடைக்கலமான ராஜா, பாதாளத்தை வென்ற பரிசுத்த ராஜா, என்றென்றைக்கும் ஆளப்போகிற நித்திய ராஜாவாகிய இயேசு தன்னைத் தாழ்த்தி, “நானே நல்ல மேய்ப்பன்” என்று கூறுகிறார். இயேசு சர்வ சிருஷ்டிக்கும் தேவன் மட்டுமல்ல (ஆதியாகமம் 1:1), பள்ளத்தாக்கிற்கும் தேவனாக (1சாமுவேல் 17 : 3, 49), மலையின் தேவனாக (1இராஜாக்கள் 18 : 19 40), தண்ணீரில் தேவனாக (யாத்திராகமம் 14 :21,22), அக்கினியின்தேவனாக (தானியேல் 3 :19 – 26) இருப்பவர். இயேசு நல்ல மேப்பராகவும், தனது ஜனங்களுக்கு நல்ல தலைவராகவும் எல்லாப் போலி மேய்ப்பர்களிடமிருந்தும் வேறுபட்டவராகவும் இருப்பவர். நாம் அவருடைய ஜனங்களும் இயேசு என்ற நல்ல மேய்ப்பரின் ஆடுகளாகவும் இருக்கிறோம். 

கிறிஸ்து எவரையும் வலுக்கட்டாயமாக தமது மந்தைக்குள் பிடித்தெழுக்க விரும்புவதில்லை. ஆனால் தன்னிடம் வந்த ஒருவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. கிறிஸ்துவாகிய மேய்ப்பனின் அன்பு சிநேகிக்கிறர்களை சிநே கிக்கும் அன்பு அல்ல. பகைப்போரை ஸ்நேகிக்கும் அன்பு. இதைக் கிறிஸ்து தன் னுடைய வாய்ச் சொல்லில் மட்டும் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டி நிரூபித்தார். தன் மேல் கல் எறிந்தவர்களைப் பார்த்து கதறி ஜெபித்தார் (மத்தேயு 23 : 37) கன்னத்தில் அறைந்தோருக்காகவும், காறி உமிழ்ந்தோருக்காகவும், தன்னுடைய ஆடையைக்கூட உரிந்து சீட்டு போட்டவர்களுக்காகவும், தன்னைச் சிலுவையில் ஆணியில் தூக்கி நிறுத்தியவர்களுக்காகவும், மூச்சுத் திணறிய வேளையிலும், “பிதாவே இவர்களை மன்னியும்” (லூக்கா 23 : 34) என்று ஜெபி த்தார். இதே போன்ற அனுபவமாகத் தான், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அனுபவமாக இருக்க வேண்டும். எனவே தான் இயேசு ஒரு புதிதான கட்டளையை நமக்குக் கொடுத்தார் அது என்னவென்றால், 

யோவான் 13 : 34 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.”

மேய்ப்பன் தன்னுடைய ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாக்கத், தன்னுடைய கரத்தில் ஏந்திச் செல்வதைப் போல, நம்மை அரவணைத்தது தூக்கிச் சுமக்கும் மேய்ப்பர் இயேசு. மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளுக்குக் கரிசனை உள்ளவராக இருப்பது போல, இயேசு தனக்குச் சொந்தமான மக்களின் மேல் தனிப்பட்ட முறையில் கரிசனை உள்ளவராக இருப்பவர். தன்னுடைய விசுவாசிகளின் தேவைகளை யும் பிரச்சனைகளையும் சந்திப்பவர்.

ஆடுகளின் பண்புகள்:

ஆடுகள் மேய்ப்பனை முற்றிலும் நம்பி அவனின் பின்னாலேயே செல்லும் தன்மையுடையது. அவைகள் மேய்ப்பனின் பின்னால் செல்லுவதால் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. அங்கும் இங்கும் பார்க்கவே பார்க்காது. மேய்ப்பன் கவனித்துக் கொள்வான் என்ற நிம்மதியில் செல்லும். மேய்ப்பனின் கையிலிருக்கும் கோலையும், தடியையும் நம்பி, அவைகளைத் தாக்க ஓநாய் போன்றவைகள் வந்தாலும் பயப்படாமல் நடக்கும். மேய்ப்பன் தரும் ஆகாரத்தை ஆவலோடு ஏற்றுக் கொள்ளும். மேய்ப்பன் ஆடுகளின் காயங்களுக்கு எண்ணெய் பூசும் போது, எந்த ஆட்சேபணையும் காட்டாமல் கண்ணீர் வடிக்கும். ஆட்டு மந்தைகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு கதவுகளோ பூட்டோ கிடையாது. மேய்ப்பன் அங்கு படுத்திருப்பார். ஆடுகள் மேய்ப்பனைத் தாண்டிச் செல்லாது. மேய்ப்பனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆடுகளுக்குத் தன்னைத் தான் காத்துக் கொள்ளும் திறமை கிடையாது. அதற்கு மூளையும் அதிகம் கிடையாது. எப்பொழுதும் தன்னை மேய்க்கிற மேய்பனைத்தான் ஆடுகள் சார்ந்திருக்கும்.

1. நல்ல மேய்ப்பன்:

நல்ல மேய்ப்பனான இயேசு அவருடைய ஆடுகளாகிய நமக்காக ஜீவனை கொடுக் கிறார். எவ்வாறு ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளிடம் கவனமாக, எச்சரிக்கையாக, அன்பாக இருப்பானோ, அதே போல் இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களிடம் அன்பாக இருப்பார். அதைத்தான் இயேசு 

மத்தேயு 20 : 28ல் “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.”

நல்ல மேய்ப்பன் தன்னாடுகளோடு நல்ல உறவை வைத்துக் கொண்டு அவைகளோடு தன் நேரத்தைச் செலவழிக்கிறார். ஆடுகள் அதன் மேய்ப்பர்களை அறிந்திருக்கிறபடியால் அவைகள் அவரது சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. அதையேதான் இயேசு நம்மைப் பற்றியும் கூறுகிறார் 

யோவான் 10 : 27ல் “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”

ஆடுகளை போஷிப்பது, பாதுகாப்பது, மீட்பது அனைத்தும் ஒரு மேய்ப்பன் செய்கிற வேலை. இயேசுவின் ஆடுகளாகிய நமக்கும் இயேசு ஒவ்வொரு நாளும் நன்மையையும், நல்லதையுமே செய்கிறார். ஆடுகளுக்கு இயேசுவைப் பற்றித் தெரியும். இயேசுவுக்கும் ஆடுகளைப் பற்றித் தெரியும். அதனால் அவருக்குப் பின் செல்லுகிறது. 2 தீமோத்தேயு 2 :19ல் “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்” என்று பவுல் கூறுவதாக வேதம் கூறுகிறது. இயேசு தன் வாயால் “சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்” என்று யோவான் 18 : 37 ல் கூறுகிறார். கர்த்தரை மேய்ப்பராகக் கொண்ட தாவீதின் வாழ்க்கையில் தேவனுடைய பிரகாசம் ஒளி வீச ஆரம்பித்ததையும், யூதா கோத்திரத்தின் மேய்ப்பனாக தாவீதை அழைத்துக் கொண்டு வந்து, ராஜாவாக அபிஷேகம் பண்ணி, சமஸ்த இஸ்ரவேலுக்கும் பெரிய ராஜாவாக உயர்ந்தப் பட்டதையும் பார்க்கிறோம்

ஜனங்களுக்காக மரித்த ஒரு மனுஷன் (யோவான் 11 : 50), அனேகருக்காக மரித்த ஒரு மனுஷகுமாரன் (மத்தேயு 10 : 45), எல்லோருக்காகவும் மரித்த ஒருவர் (2கொரிந்தியர் 5 : 14), அவர்தான் நல்ல மேய்ப்பனான இயேசு. அவர் இஸ்ர வேலின் மேய்ப்பராக இருந்து, சிவந்த சமுத்திரத்தின் வழியாக தன் ஆடுகளை நடத்தி, தேவதூதர்களின் உணவைக் கொடுத்து, போஷித்து, பகலில் மேகஸ்தம் பத்தினாலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்தினாலும் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுடைய பாதரக்ஷைகள் தேயாமல், வஸ்திரங்கள் பழமையாய்ப் போகா மல், கானானுக்குள் வழிநடத்தியவர். அந்த நல்ல மேய்ப்பர் தன்னுடைய பிள்ளை களை நன்றாய் மேய்த்து, இறுதியாக நித்தியம் வரை தோளில் சுமந்து செல்வார். நல்ல மேய்ப்பர் மந்தையை அடித்து நடத்துகிறவனாய் இராமல், அவைகளுக்கு முன்னே சென்று நடத்திச் செல்கிறவனாக இருப்பான். அவைகளைக் கட்டுப் படுத்துகிறவனாக இல்லாமல் அவர்களுக்கு வழிகாட்ட முன் செல்லுகிறவனாக இருப்பான். ஒரே நேரத்தில் இயேசு வாசலாகவும், மேய்ப்பராகவும் இருக்கிறார். யோவான்ஸ்நானன் இயேசு அவரிடத்தில் வந்து கொண்டிருக்கும் போது, 

யோவான் 1 : 29ல் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”

என்றார். இது வேதத்திலுள்ள ஒரு மகிமையான முக்கியமான சத்தியம். தேவ ஆட்டுக்குட்டி என்பது இயேசு கிறிஸ்துவின் மனிதத் தன்மையை முக்கியப் படுத்துகிறது. இயேசு நல்ல மேய்ப்பன் என்பது அவரது தெய்வீகத்தை முக்கியப் படுத்துகிறது. இயேசு நமது பாவங்களை தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். இயேசு ஒருவரே நம்மை இரட்சிக்கக்கூடியவரும், இரட்சிக்கத் தகுதி உள்ளவருமாக இருக்கிறார். வேறு எவராலும் இந்த இரட்சிப்பைக் கொடுக்க முடியாது. இயேசு மனிதனாக வந்த தேவனாக இருக்கிறார். இயேசு என்ற மேய்ப்பருக்கு இணையானவர் யாரும் கிடையாது. ஆடுகளோடு இருக்கும் படியாகவும், நம்மோடுகூட இருக்கும் படியாகவும் நம் மத்தியில் வந்தார். எசேக் கியேல்34 :11 –16 ல் பாபிலோனில் சிறையிலிருக்கும் ஜனங்களுக்காக அவர் களை விசாரிப்பேன். அவர்களைத் தேடி அவர்கள் சுய தேசத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்கிறார். காணாமல் போன ஆடுகளையெல்லாம் தேடி, துரத்தி விட்ட ஆடுகளைத் திரும்பக் கொண்டு வந்து எலும்பு முறித்த ஆடுகளின் காயங்களைக் கட்டித் திடப்படுத்துவேன் என்கிறார்.

2. ஜீவனை கொடுக்கும் மேய்ப்பன்: 

யோவான் 10 : 15 “நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.”

நல்லமேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக்கொடுப்பார். கிறிஸ்து தன்னுடையவைகளை அறிந்திருக்கிறார். தன்னுடையவைகளால் கிறிஸ்து அறியப்பட்டுமிருக்கிறார். பவுல் இதைத்தான் 2தீமோத்தேயு 1 :12ல் “நான் விசுவாசிக்கிறவன் இன்னார் என்று அறிவேன்” என்றார். 

தாவீது தன்னாடுகளை மேய்க்கும் போது கரடியில் வாயிலிருந்தும், சிங்கத்தின் வாயிலிருந்தும் தன்னாடுகளை மீட்க, தன் ஜீவனைப் பணயம் வைத்துப் போராடி னார். ஆனால் தாவீதின் குமாரனான இயேசு தன்னுடைய ஆடுகளுக்காகத் தன் ஜீவனையே கொடுத்தார். இது எல்லாமே பிதாவின் சித்தம் என்றும், அதனால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார் என்றும் யோவான் 10 : 17 ல் இயேசு கூறுகி றார். நமக்காக இயேசு மரித்ததினால் நாம் அவரை நேசிக்க வேண்டும். இயேசு தனது ஆத்மாவை இருளான மூன்று மணி நேரங்கள் மரணத்தில் ஊற்றினார். பிதாவாகிய தேவன் உலகத்தாரின் பாவங்களை இயேசுவின் மேல் வைத்தார். நமக்காக இயேசு தானாக விரும்பி அவரது ஜீவனைக் கொடுத்தார். மரிக்கும் போதும் சூழ்நிலைகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். மரிக்கும் நேரத்தையும் கூட அவரே தீர்மானித்தார். 

அது பண்டிகை நாட்களில் நடைபெறக் கூடாது என்று அவர்கள் எண்ணினார்கள் ஆனால் இயேசு அடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டது பண்டிகை நாளில் தான். இயேசு சிலுவைக்குச் சென்றபோது ராஜாதி ராஜாவாகச் சென்றார். ரோம அரசாங்கமும், இஸ்ரவேல் தேசமும் இயேசுவைத் தண்டனைக்குரியவர் என்ற னர். நீங்களும் நானும் தண்டனைக்குரியவர் தான். ஆனால் தண்டனைக்குரியவர் அல்லாத இயேசு இந்த உலகத்தின் பாவங்களுக்காக தானாகவே மரித்தார். யாராலும் இயேசுவின் ஜீவனை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியவி ல்லை. அவரே அதை வைக்கவும் எடுத்துக் கொள்ளவும் அதிகாரம் உடையவர். நாம் ஒவ்வொருவரும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்

பெரிய மேய்ப்பன்:

எபிரேயர் 13 : 20 “நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,”

பவுல் இயேசு கிறிஸ்துவை ஆடுகளின் மேய்ப்பன் என்று குறிப்பிடுகிறார். இயேசு தமது இரத்தத்தினால் நம்மோடு உடன்படிக்கை செய்தபடியால் பெரிய மேய்ப்ப னானார். சபையின் மேய்ப்பர்களும், மூப்பர்களும் பிரதான மேய்ப்பரான இயேசு வின் கீழ் பணி புரிகிறவர்கள். அவர்கள் அந்த பிரதான மேய்ப்பனின் சித்தத் தின்படி ஊழியத்தைச் செய்ய வேண்டும் என்ற பயமும், பிரதான மேய்ப்பருக்கு கணக்கொப்புவிக்க வேண்டும் என்ற பயமும் எப்பொழுதும் இருக்க வேண்டும். இவர்களுடைய கிரியைகளுக்கு இயேசு நிச்சயமாகப் பலனளிப்பார். ஒவ்வொரு ஊழியனும் தான் இயேசுவுக்காகப் பணிபுரிகிறேன், ஒரு நாள் அவரிடமிருந்து பலனைப் பெற்றுக் கொள்வேன் என்ற எதிர்பார்ப்போடு ஊழியம் செய்ய வேண் டும் இயேசு பெரிய மேய்ப்பனாக இருந்து லட்சக்கணக்கான ஜனங்களை வனாந்த ரத்தின் வழியாகக் கானானுக்குள் கூட்டிச் சென்று வழி நடத்தினார். இப்போதும் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் வழி நடத்துவார்

3. பிரதான மேய்ப்பன்:

1பேதுரு 5 : 4 “அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.”

இயேசு மகிமையின் ராஜாவாய் தேவ தூதர்களின் சேனையோடும், எக்காளச் சத்தத்தோடும் வரப்போவதால் பிரதான மேய்ப்பர் என்று அழைக்கப்படுகிறார். இந்த பிரதான மேய்ப்பர் இந்த உலகத்தை 1000 ஆண்டு ஆட்சி செய்வார். 1 பேதுரு 5 : 2- 4 ல் பேதுரு மேய்ப்பன் தன்னிடத்திலுள்ள மந்தையை கட்டாயமாகவோ, வெறுப்போடோ செய்யக்கூடாதென்றும், மனப்பூர்வமாய் உற்சாக மனதோடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். ஏனென்றால் தேவனுடைய பணியைச் செய்வது சிறந்த ஒரு காரியம். லாபத்தின் நோக்கம் அதில் இருக்கக்கூடாது. மேய்ப்பன் சரியான விதத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண் டும். அவர் தான் செய்யாத கீழ்ப்படியாத ஒற்றை தன்னோடுள்ளவர்கள் செய்யும் படி கூறுவது சரியானதல்ல என்கிறார். நாம் ஒரு பிரயோஜனமில்லாத காரியத் திற்காக உழைக்கிறோம் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இயேசு அதற்கு நிச்சயமான பலனைக் கொடுப்பார். நம்முடைய கிரியைகளுக்கு நிச்சயமாகப் பலன் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு மகிமையுள்ள வாடாத கிரீடம் கிடைக்கும் என பேதுரு கூறுகிறார். 

இந்த கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள இயேசுவின் மகிமையிலே பங்காளிகளாக ஆக வேண்டும். மகிமைக்கு ஒரு அமைப்பும், உருவமும் இருக்கிறது. சங்கீதம் 19 : 1ல் வானங்கள் தேவனுடைய மகிமையின் அளவை வெளிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. இரவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களும், வண்ண வண்ண மலர்களும் தேவனுடைய மகிமையின் வர்ணத்தை வெளிப்படுத்துகிறது. பேதுரு இந்த மகிமையை வாடாத கிரீடம் என்கிறார். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளு க்காகத் தன் ஜீவனைக் கொடுத்ததை 22 ம் சங்கீதத்திலும், ஒரு சிறந்த மேய்ப் பராக இருந்து தன் ஆடுகளை மேற்பார்வையிடுகிறவராக இருப்பதை 23ம் சங்கீதத்திலும் பார்க்கிறோம். ஆனால் 24ஆம் சங்கீதத்தில் பிரதான மேய்ப்பராக காணப்படுகிறார். இயேசு திரும்ப வரப்போகும் பிரதான மேய்ப்பர். அவர் ஒருநாள் வருவார். இப்பொழுதும் அந்த மந்தையை தன்னிடமாக வைத்திருக்கிறார். நாம் அந்த மந்தையின் உறுப்பினராக இருக்கிறோம்

4. ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும்:

யோவான் 10 : 16 “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.”

தொழுவத்திலுள்ள ஆடுகள் என்பது இஸ்ரவேலரையும், தொழுவத்தில் அல்லாத ஆடுகள் என்பது இஸ்ரவேல் அல்லாத மற்றவர்களையும் குறிக்கிறது. அந்த மற்றவர்களையும் இயேசு சேர்த்துக் கொள்வார். அவர்களும் இயேசுவின் சத்த த்தை கேட்பார்கள். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஆகும். அதா வது யூதர்களும், மற்ற வம்சத்தினரும், பணக்காரரும், அடிமைகளும், சுயாதீனர் களும், ஆண்களும், பெண்களும், கருப்பு நிறத்தவரும், வெள்ளை நிறத்தவரும் எல்லா தேசங்களிலுள்ள மக்களும் ஒரே மந்தையாயிருப்பார்கள். யூதர்கள் புற ஜாதியார் என்ற வித்தியாசம் கிறிஸ்துவின் மரணத்தோடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதைத்தான் பவுல் எபேசியர் 3 : 2 – 6 ல் கூறுகிறார். சமாரியா பட்டணத்து மனிதர்கள் “அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்” என்கிறார்கள். புறஜாதியார் மத்தியில் சுவி சேஷம் அறிவிக்கும் பணியை நிறைவேற்றும்படியாக இயேசுகிறிஸ்து பவுலைப் பிரத்தியேகமாகத் தெரிந்து கொண்டார் (அப்போஸ்தலர் 9 : 15). 

சிருஷ்டிக்கப்பட்ட எதுவும் தேவனுடைய சித்தமில்லாமல் தேவனுடைய கரத்தில் இருந்து பறித்துக் கொள்ள முடியாது. கிறிஸ்துவின் அதிகாரத்திற்குட்பட்ட நம்மை எவரும் பறிக்க முடியாது. பிதாவின் பாதுகாப்பை விட்டுத் தட்டிச்செல்ல எந்த சாத்தானாலும் முடியாது. ஆவியானவரின் முத்திரை இருக்கும் போது யாரும் தொட முடியாது. கிறிஸ்து நம்மை தெரிந்தெடுத்திருந்தால் நாம் எங்கும் ஓட முடியாது புறஜாதியார் கிறிஸ்துவின் அழைப்புக்குச் செவி கொடுத்து வரும்போது ஒரே மந்தை, ஒரே மேய்ப்பன் என்ற நிலை உருவாகும். தேவனால் உலகமெங்கும் ஸ்தாபிக்கப்படவிருக்கும் சபையில் இஸ்ரவேலராகிய யூதர்க ளுக்கும், புறஜாதியராகிய நமக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. 

தாவீதின் 23ஆம் சங்கீதம்:

ராஜாவாகவும், தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், பாடகராகவும் இசை வல்லு னராகவும், சேனைத்தலைவராகவும், மேய்ப்பராகவும் இருந்த தாவீது கர்த்தர் தான் என் அரசர் என்றோ, தீர்க்கதரிசி என்றோ, கூறாமல் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்று கூறினார். ஒரு நாட்டின் குடி மகனுக்கும் அரசனு க்குமுள்ள உறவை விட மனிதனுக்கும் தீர்க்கதரிசிக்கும் உள்ள உறவை விட, ஆட்டிற்கு மேய்ப்பனுக்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது என்பதால் தாவீது “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்று பாடினார்.” ஆடு தன்னுடைய மேய்ப்பனையே சார்ந்திருக்கும். மற்ற உறவுகள் இதுபோல் இல்லை.இந்த சங்கீ தத்தை தாவீது எப்போது பாடினார் என்றால்(1 சாமுவேல் 16 : 1–13) குடும்பத்தின் கடைசி மகனாக, சிறுவனாக இருந்த தாவீதை மட்டும் ஆடு மேய்ப்பதற்கு அனு ப்பி விட்டு, குடும்பத்திலுள்ள மற்ற அனைவரும் சாமுவேல் தீர்க்கதரிசி அழை த்த பலி விருந்துக்கு சென்றிருந்தபோது அடைந்த மன வேதனையில் பாடினார். இவ்வாறு பெற்றோர்களும், சகோதரர்களும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டிருந்த நிலையில் கர்த்தரே எனக்கு மேய்ப்பர் (ஆதரவு) என்று பாடினார். 

அன்று நடந்த விருந்து உண்மையில் தாவீதுக்கென்று தான் ஆயத்தம் பட்டிருந் தது. கர்த்தரைத் தவிர இது யாருக்கும் தெரியாது. இறுதியில் தாவீதை வெறுத்து ஒதுக்கிய பெற்றோர், சகோதரர்கள் முன்னிலையில் தைலத்தால் அபிஷேகம் பெற்று தாவீது விருந்துண்டார். சங்கீதம் 23 : 1- 6ல் கர்த்தர் எங்கள் மேய்ப்பர் என்று கூறாமல் “என் மேய்ப்பர் என்று உரிமையோடு தாவீது கூறியிருப்பதைக் காண்கிறோம். தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தம் நிறைவேறுவ தற்கு அவசியமான எந்த காரியமும் தனக்குக் குறைவு படாது என்றும், கர்த்தரு டைய மகிமையில் அதை நிறைவாக்குவார் என்றும் உறுதியாக கூறினார். தேவனுடைய சமூகத்தில் தனக்கு இளைப்பாறுதல் கிடைப்பதாகவும், பரிசுத்த ஆவியானவர் தன்னை அமர்ந்த தண்ணீர் அண்டையில் கொண்டு போய் விடுவ தாகவும் கூறினார். தன்னுடைய துயரமான நேரங்களில் தன்னைத் தேவனாகிய மேய்ப்பர் தேற்றுவதாகவும், துயரங்களை மாற்றுவதாகவும், மகிழ்ச்சி யான சூழ்நிலைகளை உண்டு பண்ணுவதாகவும் கூறுகிறார். 

நல்ல மேய்ப்பனான தேவன் தன்னுடைய வல்லமையினாலும் கிருபையினா லும் ஆத்துமாவில் புத்துணர்ச்சியைக் கொடுத்து மீண்டும் புதிய ஆற்றலைக் கொடுக்கிறார் என்கிறார். வழி தெரியாமல் திகைக்கும் தன்னை சரியான வழியில், தேவனுடைய ஆவியினால் பரிசுத்த வழியில் தன்னை நடத்துகிறார் என்றும் (ரோமர் 8 :5 – 14), தன்னுடைய பலவீனத்தில் பலனையும், பாவத்தில் பரிசுத்தத்தையும், துக்கத்தில் தேறுதலையும் தருவதாகக் கூறுகிறார். கர்த்தரு டைய பிரசன்னம் தன்னோடு இருப்பதால், ஆபத்தான கஷ்டமான நேரங்களி லும், மரணத்தின் நேரங்களிலும் பயப்பட மாட்டேன் என்கிறார். தேவனுடைய கோலும், தடியும் தனக்குத் தேவ பலத்தையும், தேவ வல்லமையையும், வழி நடத்துதலையும் மீண்டும் தனக்குத் தருவதாகக் கூறுகிறார். தாவீதைக் கொல்வ தற்கு பொல்லாத சேனைகள் சூழ்ந்தாலும் தேவனுடைய சமூகத்தில் களி கூர்ந்தி ருக்கும் கிருபையைத் தனக்குத் தேவன் அளித்திருப்பதாகக் கூறுகிறார். தான் மரணம் அடை யும் வரை நன்மையும் கிருபையும் தன்னோடிருக்கும் என்கிறார்.

இந்த சங்கீதத்தில் உலகப்பிரகாரமான அத்தனை ஆசீர்வாதங்களையும், நித்தியத் திற்குரிய மேன்மையான ஆசீர்வாதங்களையும் பார்க்கிறோம். இதில் சந்தோஷ மாக வாழ்வதற்கான ரகசியத்தையும், சந்தோஷமாக எவ்வாறு மரணத்திற்கு செல்ல வேண்டும் என்ற ரகசியத்தையும் நித்தியத்தில் எவ்வாறு சந்தோஷமாக இருப்போம் என்றும், தாவீது கூறிய அழகான விசுவாச அறிக்கைகளைப் பார்க்க லாம். எனவே நாமும் விசுவாசத்தோடு கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் அனாதை அல்ல, அவர் என்னை நடத்துவார், அவருடைய பாதையில் என்னை அழைத்துச் செல்வார் என்று அவரைப் பற்றி கொள்வோம்.

முடிவுரை

அருமை மேய்ப்பரான இயேசு நம்மைத் தேடி வந்து, நமக்காக இரத்தம் சித்தி நம்மைப் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் மீட்டு நல்ல மேய்ப்பராக வழி நடத்தினார். இந்த மேய்ப்பர் அவருடைய ஆடுகளான நம்மை ஆற்றித் தேற்றி அரவணைப்பார். நமது ஆத்மாவுக்கு ஆறுதலையும் தேறுதலையும் தருவார். நமது ஆத்துமா நித்திய நித்திய காலமாய் பரலோகத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அழைத்துச் செல்பவரும் அவர் ஒருவரே. பெரிய மேய்ப்பரான இயேசு நமது இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைத் தருவார் (எரேமியா 3 : 15). பிரதான மேய்ப்பரான இயேசு என் இயேசு இந்த உலகத்தை ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யப் போகும்போது அவனவனுடைய கிரியைகளின்படி அவர் அளிக்கும் பலன் நமக்கு வரும் (வெளிப்படுத்தல் 22 : 12). நாம் நம்முடைய குடும்பத்தை, பிள்ளைகளை, ஊழியத்தை மேய்ப்பராகிய இயேசுவிடம் முற்றிலும் ஒப்படைப்போம். 

அப்போது நல்ல மேய்ப்பனான இயேசு சத்ருவின் சதித்திட்டங்களை நிர்மூல மாக்கி, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களி னாலும் நம்மை நிரப்புவார். அவருடைய மேய்ச்சலில் ஆடுகளாக இருந்து, அவருடைய கரங்களைப் பிடித்து நாம் நடக்கும்போது, நமது கண்ணீர், துக்கங் கள், பாடுகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார். இயேசு தான் நம் மேய்ப்பர் நாம் ஆடுகள். அவர் மூலைக்கல். நாம் அவர் மேல் கட்டப்படும் ஜீவனுள்ள கற்கள். அவர் அஸ்திவாரம். அவர் தலை நாம் அவரது சரீரம். அவர் நம் மணவாளன், நாம் அவருடைய மணவாட்டி. ஒரு ஆட்டு ஆந்தையைக் கவனித்துக் கொள்கிற மேய்ப்பர்களைப் போல நம்முடைய பொறுப்பில் இருக்கும் மக்களின் கூட்டத்தை நாம் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் இயேசு தன்னுடைய சிலுவை மரணத்துக்கு முந்தின நாளில் தன்னுடைய ஆடுகளை விட்டுப் பிரிந்து போக விருப்பமில்லாமல் கிறிஸ்து பிதாவைநோக்கி,

யோவான் 17 : 24ல் “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.” என்று ஜெபித்ததைப் பார்க்கிறோம். இயேசு ஒரு போதும் நம்மை கைவிடமாட்டார். ஆமென்.

Related Posts