கடுகுவிதையானது மிகச்சிறிய அளவில் தோன்றி பெரிய செடியாகிறது போல தேவ ராஜ்ஜியமும் சிறியதாய்த் தோன்றி நாளடைவில் மிகப்பெரியதாய் விரிவடையும். இயேசுவும் அவருடைய அர்பணிப்புள்ள சீடர் கூட்டமும் சேர்ந்து தேவராஜ்ஜியம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது அது வளர்ந்து, விரிந்து, பெரிதாகி வல்லமையுள்ளதாய்க் காணப்படுகிறது. கடுகுச் செடியானது வளர்ந்து பெரிதான பின் அதன் கிளைகளில் வானத்துப் பறவைகள் வந்து தங்குவதுபோல கள்ளப் போதகர்கள் தேவாலயத்துக்குள் நுழைந்து சத்தியம் என்னும் நல் வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு போகிறார்கள்.
நாம் சிறு கூட்டமாகச் சேர்ந்து நற்செய்தியை தெரிவித்து ஆயிரக்கணக்கான இயேசுவை அறியாத ஆத்மாக்களை கர்த்தரண்டை சேர்ப்போம்.