இயேசு உயிர்த்தெழுந்த தெய்வமாயிருக்கிறார். மரணத்தைக் காணாத மனிதன் ஒருவனும் பூமியில் இல்லை. அதேபோல் மரிக்காமல் இருப்பவரும் ஒருவரும் இல்லை. மரித்தும் உயிரோடு எழுந்து வருபவரும் ஒருவரும் இல்லை. ஆனால் இயேசு ஒருவரே மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து எப்பொழுதும் பரலோகத்தில் உயிருள்ளவராக வீற்றிருக்கிறார்.
இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய இரகசிய வருகைக்கு முன் மரணமடைந்தால் இயேசுவால் அச்சமயத்தில் உயிர்த்தெழுதல் அடைவான். அச்சமயத்தில் உயிரோடிருந்தால் மரணமடையவே மாட்டான். 1 கொரி 15 :51 – 54 1 தெச 4 : 14 – 17 மேலும் விசுவாசிக்கிறவன் நிலைபேறுடைய வாழ்வைப் பெற்றிருப்பான், என்றும் கிறிஸ்துவோடிருப்பான். விசுவாசியா தவர்கள் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் உயிர்த்தெழும்பி நியாயத்தீர்ப்படை
வார்கள் யோவான் 3 : 18, 36 வெளி 20 : 12, 13