இயேசு கலிலேயா கடலருகே வந்த போது கொன்னைவாயுடைய செவிடனை அவரிடத்தில் கொண்டு வந்தனர். இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு போனார். முதலில் அவரது விரல்களை அவனது காதுகளில் வைத்தார். பின் உமிழ்ந்து அவனது நாவைத் தொட்டார், அதன் பின் வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு “எப்பத்தா” என்றார். எப்பத்தா என்றால் திறக்கப்படுவாயாக என்று பொருள் உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டது. அவனுக்குக் கட்டியிருந்தத நாவின் கட்டுகளும் அவிழ்ந்தன. உடனே அவன் செவ்வையாய்ப் பேசினான்.