இயேசு ஒலிவமலைக்குச் சென்று சீஷர்களுடன் கடைசியாக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஜனங்கள் கூட்டமாய் யூதாசுடன் வந்து அவரைப் பிடித்தனர். பேதுரு ஆசாரியனுடைய வேலைகாரனான மல்குஸ் என்பவனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனது காதைத் தொட்டு சுகமாக்கினார். வெட்டப்பட்ட காதை உடனடியாக குணமாக்குவது ஒரு பெரிய அற்புதம். இந்த அற்புதத்தை பிரதான ஆசாரியனின் வீட்டைச்சார்ந்த ஒரு மனிதனுக்குச் செய்தான். இந்நிகழ்ச்சி கைது செய்தவர்களுக்கும் பிரதான ஆசாரியருக்கும் ஒரு எச்சரிப்பாக அமைந்தது