Menu Close

லூக்கா சுவிசேஷ புத்தகத்தின் முன்னுரை

லூக்கா என்ற பெயரின் பொருள் பிரகாசமுள்ள. இவன் சீரியாவிலிலுள்ள அந்தியோகியாவைச் சேர்ந்தவன். இவன் வைத்தியத் தொழில் புரிந்தவன். இவன் கிரேக்க குலத்தைச் சார்ந்தவன். இவனைப் பவுல் விருத்தசேதனம் பெற்றவர்களோடு சேர்த்து எழுதவில்லை – கொலோ 4:14 இவன் லூக்கா, அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற இரண்டு நூல்களை எழுதியவன். இவன் துரோவாவில் பவுலோடு  சேர்ந்து ஊழியம் செய்தான். பின் மக்கோதோனியாவுக்கும் போனான். லூக்கா சுவிசேஷத்தை முதல் பிரபந்தம் என்று அப் 1:2ல் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். பவுலின் முதல் சிறைவாசத்தில் லூக்கா அவருடன் இருந்தான். “பிரியமான வைத்தியனான லூக்கா” என பவுல் இவனைக்   குறிப்பிட்டிருப்பதை கொலோ 4:4ல் காணலாம். பவுல் இரண்டாம் முறை சிறைபட்ட போதும் “லூக்கா மாத்திரம் என்னோடிருக்கிறான்” 2தீமோ  4:11 என்று பவுல் கூறியிருப்பதைக் காணலாம்.

லூக்கா இந்தசுவிசேஷத்தை தெயோப்பிலு என்ற உயர்குடிமகனுக்கு எழுதினான். இதில் இயேசுவை மனுஷகுமாரனாகவும், உலக இரட்சகராகவும் காட்டுகிறான். இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை இந்நூலில் மட்டுமே உள்ளன – 2:41- 52  இந்நூலில் பெண்களைப் பற்றி அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. இதில்

  1. மரியாளின் பாடல் – 1:46-55
  2. சகரியாவின் பாடல் 1: 67—79
  3. தூதர்களின் பாடல் – 2:14
  4. சீமோனின் பாடல் 2:29—32

ஆகியவைகளைக் காணலாம். இதில் மட்டுமே கெட்ட குமாரனின் உவமை, லாசரு, ஐசுவரியவானின் உவமை, விதவை உவமை, பரிச்சேயன், ஆயக்காரன் பற்றிய உவமை ஆகியவற்றைக் காணலாம். லூக்கா கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிடப்பட்டு இரத்தசாட்சயாய் மரித்தான்.

Related Posts