இந்த உவமையை இயேசு சீஷர்களிடம் கூறினார். ஒரு வேலைக்காரன் தன் எஜமான் களைப்போடு வந்து சாப்பாடு தயார் பண்ணக் கட்டளையிட்டால் அவன் உடனே சாப்பாட்டை ஆயத்தம் பண்ணுவான். அப்படிச் செய்ததினால் எஜமான் அந்த வேலைக்காரனுக்கு உபச்சாரம் செய்யான். அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் செய்தபின் நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரன் எங்கள் கடமையை மட்டும் செய்தோம் என்று சொல்லுங்கள் என்று இயேசு கூறினார். ஏனெனில் கர்த்தரின் கிருபையினாலும் ஆவியானவருடைய உதவியினாலும் நாம் அவற்றை செய்கிறோம். நமது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மட்டும் எதையும் நம்மால் சரியாகச் செய்ய முடியாது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் கர்த்தரிடம் நாம் எதையும் எதிர்பார்க்காமல் அவர் நமக்கு கட்டளையிட்டவைகளை மட்டும் செய்வோம்.