இயேசு கலிலேயன் என்று பிலாத்து அறிந்து அவர் ஏரோதின் அதிகாரத்துக்கு உள்ளானவர் என்று அவனிடம் இயேசுவை அனுப்பினான். ஏரோது அநேக காரியங்களைக் குறித்து இயேசுவிடம் வினாவினான். இயேசு எதுவும் பேசாமலிருந்தார். உடனே ஏரோது தன் போர்சேவகரோடுகூட அவரை நிந்தித்து பரியாசம் பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்ப பிலாத்துவினிடம் அனுப்பினான் – லூக்கா 23 : 6 – 12
பிலாத்து இயேசுவினிடம் ஒரு குற்றத்தையும் காணாததால் “அவரைத் தண்டித்து விடுதலை யாக்குவேன்” என்றான். ஆனால் யூதர்கள் “பரபாசை விடுதலை செய்யும் இயேசுவை சிலுவையிலறையும்” என்று சத்தமிட்டனர். பிலாத்து தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி “இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன்” என்றான். அதற்கு ஜனங்கள் “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக “ என்றனர் – மத்தேயு 27 : 15 – 26 லூக்கா 23 : 13 – 25