Menu Close

இயேசு கடல் மீது நடந்த அற்புதம்: மத்தேயு 14:22-32 மாற்கு 6:45-51 யோவான் 6:15-21

இயேசு ஐயாயிரம் பேரை போஷித்தபின், சீஷர்களை நோக்கி தமக்கு முன்பாக கலிலேயாக் கடலின் மறுகரைக்குப் போகச் சொன்னார். அங்கு ஒரு படகு தான் இருந்தது. இயேசு எப்படி மறுகரைக்கு வருவார் என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்கவில்லை. எல்லாரையும் அனுப்பினபின் இயேசு தனிமையாக இருந்தார். அவர் அங்கு ஒரு மலைக்குச் சென்று ஜெபிக்கலானார்.

சீஷர்கள் சென்ற படகு கடலின் நடுவில் சென்றபோது, காற்று எதிர்திசையில் பலமாக அடித்ததால் படகு தடுமாறியது. அப்போது இரவு நான்காம் ஜாமமாயிருந்தது. இயேசு கடல் மீது நடந்து அவர்களிடமாய்ச் சென்றார். இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்ட சீஷர்கள் பயந்து, நடுங்கி ஆவேசம் என்று எண்ணி சத்தமிட்டு அலறினார்கள். தங்களிடமாய் வந்தது இயேசு என்று அவர்கள் அறியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களுடனே பேசி “திடன்கொள்ளுங்கள், நான் தான் பயப்படாதிருங்கள்” என்று சொன்னார்.

பேதுரு சுறுசுறுப்பானவர், துணிச்சல் மிக்கவர். அவர் இயேசுவை நோக்கி “ஆண்டவரே நீரேயானால் நான் ஜலத்தின் மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும்” என்றார். அதற்கு இயேசு “வா” என்றார். பேதுரு படகை விட்டிறங்கி இயேசுவிடம் போக கடல் மீது நடந்தார். காற்று பலமாய் இருந்ததினால் பேதுரு பயந்து கடலில் அமிழ்ந்து போகலானார். அப்பொழுது பேதுரு “ஆண்டவரே என்னை இரட்சியும்” என்று கூப்பிட்டார். உடனே இயேசு தமது கரத்தை நீட்டி அவரைப் பார்த்து “அற்பவிசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்” என்றார். படகில் இயேசு ஏறினவுடனே காற்று அமர்ந்தது. மெய்யாகவே “நீர் தேவனுடைய குமாரன்” என்று சொல்லி அவர்கள் அவரைப் பணிந்து கொண்டார்கள். தம்முடைய சீஷர்கள் நடுக்கடலில் காற்றினால் அலைகளினால் அலைகழிக்கப்பட்ட போது அந்த ஆபத்தான நேரத்தில் இயேசுவே அவர்களைத் தேடி வந்து காப்பாற்றினார். சீஷர்கள் அத்தனை அலைகளினால் தாக்கப்பட்ட போதிலும் இயேசுவைத் தேடவில்லை.

Related Posts