இயேசுவின் சீஷர்கள் சிலர் கைகளைக் கழுவாமலே போஜனம் பண்ணுகிறதைப்
பார்த்த எருசலேமிலிருந்து வந்த பரிச்சேயரும், வேதபாரகரும் “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி ஏன் கைகழுவாமல் சாப்பிடுகிறார்கள்” என்று
கேட்டனர். உணவருந்துவதற்கு முன் கைகளைக் கழுவுவது என்பது மிகவும் நல்லது. பாரம்பரியப்படி கழுவவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.
பாரம்பரியங்கள் வேதவசனத்தின்படி இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். புறம்பானதாக இருந்தால் அவற்றைப் பின்பற்றக் கூடாது. உள்ளத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், பரிசுத்தத்திற்கான வாஞ்சையுமில்லாமல், சமய ஆசாரங்களை மட்டும் பின்பற்றுகிறவர்கள் இறுதியில் வெட்கமும், வேதனையும் அடைவர். (மாற் 7 : 6) நாம் பரிசுத்தவான்கள் என்று மற்றவர்கள் நினைப்பதற்காகவும், மதிப்பதற்காகவும் ஆராதிப்பது வீணாகத் தொழுது கொள்வதாகும். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட கர்த்தர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது தான் முக்கியம்.
தகப்பனுக்கும், தாய்க்கும் எந்த உதவியும் செய்யாமல் அதற்குப் பதில் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்றால் அது தவறு. இதில் மாற்கு 7 : 10 ல் மோசே சொல்லியிருக்கிறார் என்பதை இயேசு மாற்கு 7 :13 ல் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். மேலும் இயேசு 7 : 15 ல் மனுஷருக்கு வாய்க்குள்ளே போகிற ஆகாரங்கள் தீட்டுப் படுத்தாது எனக்கூறியிருக்கிறார். இதில் போதை மருந்துகள், மதுபானங்கள் உட்கொள்வது சரியென்று எடுத்துக் கொள்ளக் கூடாது. குடிப்பவர்கள் தேவனுடைய அரசை சுதந்தரிக்க முடியாது. மனுஷருக்குள்ளிருந்து புறப்படுகிற பொல்லாத சிந்த்தனைகளும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கூறுகிறார்