Menu Close

கண்கள் பற்றி இயேசு: மத்தேயு 6:22,23

ஒரு மனிதனுடைய கண்கள் அவனுக்கு விளக்காக, வெளிச்சத்தைத் தரும் கருவியாக இயேசு குறிப்பிடுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்பது, கண்கள் நம்முடைய மனது அல்லது காரியங்களை விளங்கிக் கொள்ளும் திறனுக்கு உருவமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய மனது சீராக செயல்பட வேண்டும் என்பதை “உன் கண் தெளிவாயிருந்தால்” என்று இயேசு குறிப்பிடுகிறார். பொருளாசை என்ற தீமையினிமித்தம் நம் மனது பாதிப்படைகிறது. இருளடைகிறது. அப்படியில்லாமல் நம் கண் தெளிவாயிருக்கும் போது நம் மனது வழியாக சரீரத்துக்குள் உட்பிரவேசிக்கும் காரியங்களினால் சரீரம் வெளிச்சமடைகிறது, ஆசீர்வதிக்கப்படுகிறது.
உன் கண் கெட்டதாயிருந்தால் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் என்றும் இயேசு உபதேசித்தார். கண்ணில் ஒளியில்லாதவர்கள் இருளைத்தவிர வேறு எதையும் காணாததைப் போன்று, ஒருவனுடைய ஆத்துமா இருளடைந்திருந்தால் அவனது இவ்வுலக வாழ்க்கையும், ஆவிக்குரிய வாழ்க்கையும் மிகவும் இருளடைந்ததாகும். “தெளிவாயிருக்கும் கண்” என்பது ஆவிக்குரிய காரியங்களில் நோக்கமாயிருக்க வேண்டும் என்பதாகும்.

Related Posts