Menu Close

விபச்சாரம், விவாகரத்து பற்றி இயேசு: மத்தேயு 5:27-32 லூக்கா 16:18

ஒருவன் பாவச்செயலில் ஈடுபட்டால் தான் பாவம் செய்துவிட்டான் என்பதில்லை. ஒருவன் ஒருத்தியை இச்சையோடு பார்த்தால் கூட அவன் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தவனாவான். பார்ப்பது தவறல்ல. அடையவேண்டும் என்று இச்சையுடன் பார்ப்பது தவறாகும்.  பார்க்கவே கூடாது என்று கண்களை மூடிக்கொண்டு சென்றால் ஆபத்தில் முடியும். சாதாரணமாகப் பார்க்கும்பொழுது சிலவேளைகளில் மனதில் இச்சையான எண்ணம் தோன்றுவதுண்டு. அச்சமயத்தில் நமது பார்வையை திருப்பிக்கொள்ள வேண்டும். நமது இச்சையான எண்ணங்களிலிருந்து விடுதலைபெற தேவனை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும். உன்னுடைய வலது கையோ, அல்லது வலது கண்ணோ இடலறுண்டாக்கும் போது அதைப்பிடுங்கிப் போடவேண்டும் என்கிறார். சரீரம் முழுவதும் நரகத்திற்குப் போவதைவிட உன் அவயங்களில் ஒன்று போவது நலம். நரகத்திற்குச் செல்வதினின்று தப்பித்துக்கொள்ள இவவசனங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. பாவத்தில் மரிக்கும் மனிதன் இறுதியில் சரீரத்துடன் நரகத்திற்குச் செல்வான். உயிர்த்தெழுதலின் போது சரீரங்களுடன் மக்கள் உயிர்த்தெழுவார்கள்.

Related Posts