1. இதில் இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்தமாவுக்கு ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். ஒரு ஸ்திரீ அதை புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
2. கொஞ்சம் புளித்தமா மூன்றுபடி மாவையும் புளிப்பாக்கி விடுவதைப் போல கொஞ்சம் பேரில் தொடங்கிய தேவராஜ்ஜியம் விரிவடைந்து உலகமெங்கும் பரவுவதைக் காட்டுகிறது.
3. பழையஏற்பாட்டில் இது தீமை, அசுத்தத்திற்கு அடையாளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு புளித்தமா புளிக்கச் செய்து பொருட்களின் தன்மையைக் கெடுக்கிறது – யாத் 12 : 19, 13 : 6 –8
4. புதிய ஏற்பாட்டில் புளித்தமாவானது பரிச்சேயர்களும், சதுசேயர்களும் போதிக்கும் கள்ளப் போதகங்களுக்கும், தீமையான போதகங்களுக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. – 1கொரி 5 : 6 – 8
5. பவுல் புளித்தமாவானது துர்குணம், பொல்லாப்புக்கு ஒப்பிடுகிறார்.
ஒவ்வொருவனும் தீமை என்னும் புளித்தமா தன்னுடைய பக்தி வாழ்க்கையைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.