லூக் 23 : 26, 27,32, 33 “அவர்கள் இயேசுவைக் கொண்டு போகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்து கொண்டுவரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள்.”
“திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.”
“குற்றவாளிகளாகிய வேறே இரண்டு பேரும் அவரோடேகூடக் கொலை செய்யப்படுவதற்குக் கொண்டு போகப் பட்டார்கள்.”
“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அங்கே
அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது
பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.”