தேவனை அணுகும் வழி பரிசுத்தம் என்னும் பாதையில் உள்ளது. பரிசுத்தமில்லாமல்
ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது. இருதயத்தில் பரிசுத்தமுள்ளவர்களே தேவனைத் தரிசிப்பார்கள் என அறியாத யூதர்கள் உலகச் சடங்குகளால் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்தனர். சீடர்கள் கைகழுவாமல் சாப்பிட்டதை அசுத்தம் என்று நினைத்தார்களேயன்றி இருதயத்தில் பதிந்துள்ள அசுத்தத்தை அவர்கள் கவனிக்கவில்லை. எனவே ஆண்டவர் அவர்களுக்குப் பரிசுத்தத்தைக் குறித்து தெளிவாக போதனை செய்தார். அது என்னவென்றால்
1. உள்ளத்தால் தேவனைக் கனம் பண்ணுவது பரிசுத்தம்.
2. இருதயத்தால் தேவனை நெருங்கி வாழுவது பரிசுத்தம்.
3. தேவ கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பரிசுத்தம்.
4. புத்தியுள்ள ஆராதனை செய்வது பரிசுத்தம்.
5. பாரம்பரியத்தைக் கைவிடுவது பரிசுத்தம்.
6. தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவது பரிசுத்தம்.
6. வேதவசனத்தை மதிப்பது பரிசுத்தம்.