Menu Close

மீனின் வாயில் பணத்தை வரவழைத்த இயேசு – மத்தேயு 17 : 24 – 27

இயேசுவும் சீஷர்களும் கப்பர்நாகூமுக்கு வந்த போது வரிப்பணம் வாங்குகிற
வர்கள் பேதுருவினிடம் வந்து “உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா”
என்றனர். அதற்கு “செலுத்துகிறார்” என்று பேதுரு பதிலளித்தார். ஆனாலும் பேதுருவுக்குள் ஒரு கலக்கம் ஏற்பட்டிருக்கும் கையில் பணம் இல்லையே எப்படி வரி கட்டுவது என்று.   பேதுரு வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவுடன் இதைப்பற்றி ஒன்றும் கூறாமலேயே    “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது. பூமியின் ராஜாக்கள் தீர்வையையும், வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலா, அன்னியரிடத்திலா யாரிடத்தில் வாங்குகிறார்கள் “என்று கேட்டார்.

அதற்கு பேதுரு அந்நியரிடத்தில் என்றவுடன் “அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டியதில்லையே” என்று கூறிவிட்டு “ஆகிலும் நாம் அவர்களுக்கு இடறலாயிரா தபடிக்கு நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து   அதின் வாயைத் திறந்தது அங்குள்ள வெள்ளிப் பணத்தை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு“ என்றார்.

இயேசு வரிகளைச் செலுத்தியதிலிருந்து நாமும் வரி செலுத்தத் தவறக் கூடாது என்றறிகிறோம். தூண்டில் போடும் போது மீன் கிடைப்பது, அந்த மீனின் வாயில் வெள்ளிப் பணம் இருப்பது எல்லாம் ஏற்கெனவே இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. பேதுரு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்படிந்து கடலில் போய் மீனைப் பிடித்து அதன் வாயிலிருந்து வெள்ளிப் பணத்தை இயேசு கூறியபடி எடுத்து இயேசுவுக்கும், தனக்கும் வரிப்பணத்தைக் கட்டினார். அதோடு அவருக்கும் ஒரு பெரிய மீனும் இலவசமாய்க் கிடைத்தது.

பேதுரு பேசுவதற்கு முன்னமே பேதுரு கூறப்போவதை இயேசு அறிந்திருந்ததைப் போல நமது சிந்தனைகளையும் இயேசு அறிவார் என்ற உணர்வுடன் அசுத்தமான சிந்தனைகளை சிந்திக்காமல் இருப்போமாக. பேதுரு இயேசு கூறினவுடன் கீழ்படிந்ததைப்   போல நாமும் கீழ்படிந்து தேவ ஆசியைப் பெறுவோம்.

Related Posts