Menu Close

முதன்மையான இடம் பற்றிய உவமை – லூக்கா 14 : 7 – 14

இயேசு ஒரு பரிச்சேயன் வீட்டில் அழைக்கப்பட்டிருந்த போது சிலர் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதைக் கண்டு இந்த உவமையைச் சொன்னார். அவர் கூறினதாவது: “பந்தியில் முதன்மையான இடத்தில் நீ உட்கார்ந்தால், உன்னைவிட கனமுள்ள ஒருவன் வந்தால் உன்னை அழைத்தவன் உன்னிடத்தில் வந்து அவருக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்கு போகவேண்டியதாயிருக்கும். நீ முதலிலேயே தாழ்ந்த இடத்தில் உட்கார்ந்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை உயர்ந்த இடத்தில் உட்காரச் சொல்வான். அப்பொழுது உன்னுடனேகூட இருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்” என்றார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவானென்று   அறிகிறோம்.

Related Posts