ஒன்றாம் நிலை:
மத் 26 : 37 “பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும் வியாகூலப்படவும் தொடங்கினார்.”
இரண்டாம் நிலை:
மத் 26 : 67 “இயேசுவின் முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”
மூன்றாம் நிலை:
மத் 27 : 26 “இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.”
நான்காம் நிலை:
மத் 27 : 28 – 30 “அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,”
“முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில்
ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,
“அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.”
ஐந்தாம் நிலை:
மத் 27 : 31 “அவரைப் பரியாசம் பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.”
ஆறாம் நிலை:
மத் 27 : 32 – 34 “போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையை சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.”
“கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது,”
“கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.”
ஏழாம் நிலை:
மத் 27 : 35 “அவரைச் சிலுவையில் அறைந்தனர்.”
எட்டாம் நிலை:
மத் 27 : 39 – 41 “அந்த வழியாய் நடந்து போகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:”
“தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே
ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று
அவரைத் தூஷித்தார்கள்.”
“அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் பரியாசம் பண்ணினார்கள்.”
ஒன்பதாம் நிலை:
மத் 27 : 46 “ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபத்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.”
பத்தாம் நிலை:
மத் 27 : 50 “இயேசு, மகா சத்தமாய்க் கூபிட்டு, ஆவியை விட்டார்.”