Menu Close

பேதுரு தொற்காளை உயிரோடெழுப்பிய அற்புதம்

யோப்பா பட்டணம்:

யோப்பா பட்டணம் ஒரு துறைமுகப் பட்டணம் .இது மிகவும் செல்வச் செழிப்புள்ள பிரசித்தி பெற்ற பட்டணம். இந்தப் பட்டணம் லித்தாவிலிருந்து 12 மைல் தூரமும், எருசலேமிலிருந்து 30மைல் தூரம் உள்ளது. யோசுவா கானானைச் சுதந்தரித்த பின் எல்லாக் கோத்திரத்தாருக்கும் கானானைப் பங்கிட்டுக் கொடுக்கும் போது தாண் கோத்திரத்தாருக்கு யோப்பா பகுதி யைக் கொடுத்தான். யோனா தர்ஷீசுக்குப் போகக் கப்பலேறிய பட்டணம் யோப்பா பட்டணம்(யோனா 1:3). சாலமோன் தேவாலயத்தைக் கட்டப் பிர யாசப்படும் போது தீருவின் ராஜாவாகிய ஈராம் ஆலயத்திற்குத் தேவை யானக் கட்டுமானப் பொருட்களையும், மரங்களையும் இந்தத் துறைமுகத் தின் மூலம் தான் அனுப்பி வைத்தான்.எஸ்றா ஆலயம் கட்டும் போது கோரேசின் உத்தரவுபடி லீபனோனிலிருந்து கேதுரு மரங்களை யோப்பா துறைமுகத்துக்குத் தான் அனுப்பி வைத்தான் .அப்போஸ்தலர் 11 : 5 ல் பேதுரு யோப்பா பட்டணத்திலிருக்கும் போது தான் ஞானதிருஷ்டி யடை ந்தான். கி. பி 197 வரை யோப்பா எகிப்தியருக்குக் கீழும், கி. பி 63 வரை கிரேக்கர்களுக்குக் கீழும், கி. பி 47 வரை ரோமர்களுக்குக் கீழுமிருந்தது. அதன்பின் அதை யூதர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். ஏரோது இந்தப் பட் டணத்தை யூதர்களிடமிருந்து பிடுங்கினான்.அநேக கலாச்சாரங்கள் நிறை ந்த பட்டணம். அப்போஸ்தலர் 9 : 38 ல் சீஷர்கள் என்றும், 9 : 41ல் பரிசுத் தவான்கள் என்றும் கூறியிருப்பதால், அநேக சீஷர்களும், பரிசுத்தவான் களும் அங்கிருந்தார்கள் என்று பார்க்கிறோம். 

தொற்காள்: 

அப்போஸ்தலர் 9 : 36 – 42 “ யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். 

அங்கு தபித்தாள் என்ற ஒரு பெண் வாழ்ந்து வந்தாள். தபித்தாள் என்பது எபிரேய பெயர். கிரேக்க மொழியில் அது தொற்காள் ஆகும். இதன் பொருள் “பெண் மான்” என்பதாகும். அப்போஸ்தலனாகிய பிலிப்பு காசா பட்டணத்திற்குப் போகும்போது, யோப்பா பட்டணத்தின் வழியாகச் சென்றிருப்பார். அப்பொழுது யோப்பா பட்டணத்தில் ஊழியம் செய்யும் போது இயேசுவை தொற்காள் ஏற்றுக் கொண்டிருக்கலாம். அவளை சீஷி என்று அழைக்கப்பட்டனர். புதிய ஏற்பாட்டில் இவள் மட்டுமே சீஷி என்று அழைக்கப்படத் தகுதி பெற்றவ ளாக இருந்தாள். அதனால் இவள் இயேசுவோடு நெருங்கிய உறவும், விசு வாசமும் கொண்டவளாயிருந்தாள். இவள் இயேசுவின் மேல் வைத்த விசு வாசத்தைத் தன் கிரியையில் காண்பித்தாள் (யாக்கோபு 2 : 14). இவள் ஒரு சாதாரணப் பெண்ணாக வாழ்ந்து விட்டுப் போகாமல் தேவனையும், தேவ னுடைய செயல்களையும் தன்னுடைய கிரியைகள் மூலமாக வெளிப்படு த்தினவள்.பேதுருவின் மூலம் தேவன் வியாதிகளைக் குணமாக்கவும், மரி த்தவர்களை உயிரோடெழுப்பவும் கிரியை செய்ததுபோல, தொற்காளின் மூலமும் அவள் நற்கிரியைகளைச் செய்யவும் அன்பு காட்டவும் தூண்டி னார். தேவையிலிருப்பவர்களுக்கு அன்புகாட்டி உதவி செய்வதும் பரிசுத்த ஆவியானவரின் நற்கிரியையாகும். இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில், 

மத்தேயு 5 : 16ல் “மனுஷர் உங்கள் நற்கிரியைகனைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது“ என்கிறார். பவுல் 

எபேசியர் 2 : 10ல் “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;”

என்றும் கூறியிருப்பதைத் தொற்காள் செயலில் காட்டினாள். பவுலும் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்ய வேண்டுமென்று ரோமர்க ளுக்கு எழுதியநிருபம் 2 : 7லும், 2 கொரிந்தியர் 9 : 8 ல் நற்கிரியைகள் செய் வதில் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். நாமும் இரட்சிக்கப்பட்ட பின் பிறருக்கு உதவுகிறவர்களாக, நன்மைகள் செய்கிறவர்களாகத் திகழ வேண்டும். யூத மார்க்கத்தில் எந்த ஒரு பெண் ணுக்கும் சீஷி என்ற பட்டம் கொடுக்க மாட்டார்கள் ஆண்களுக்குத்தான் அவர்கள் மதிப்பளிப்பார்கள் அவர்கள் பெயர் தான் பட்டியலிலும் வரும். ஆனால் தேவன் இவளைக் கனப்படுத்தி சீஷி என்று பெயர் வைக்கிறார். இயேசுவின் கோட்பாடுகளையும், கட்டளைகளையும் கைக்கொண்டு வாழ் பவன்தான் சீஷனாக, சீஷியாக இருக்க முடியும் அப்படி வாழ்ந்தவள் தபித்தாள். 

தொற்காள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நற்கிரியைகளைச் செய்து வந்தாள். இவள் செய்த நற்கிரியை என்னவென்றால் யோப்பா பட்டண த்தில் வாழும்ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் தனக்குத் தேவன் கொடு த்த தையல்தைக்கும் தாலந்தைப் பயன்படுத்தி வஸ்திரங்களையும் அங்கி ளையும் தைத்துக் கொடுத்து உதவினாள். கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்ற வார்த்தையின்படி தேவன் பேரில் தனக்குள்ள விசுவாச த்தை நற்கிரியைகள் செய்து வெளிப்படுத்தினாள். இவள் இயேசுவைப் பற்றிப் பிரசங்கம் பண்ணுபவள் அல்ல.மேலும் அவளிடம் பெரிய பத வியோ, கல்வியோ, செல்வமோகிடையாது. ஆனால் மக்களுக்குச் செய்த உதவியினால் கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்தாள். மேலும் அவள் மிகுதியான தான தர்மங்களைச் செய்தாள் என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். 

புறஜாதியான கொர்நேலியுவும் மிகுந்த தானதர்மங்கள் செய்தவன். வேத த்தில் இடம் பெற்றான்.இவள் சபையிலும் சமூகத்திலும் கனத்துக்குரிய பாத்திரமாக,பிறருக்குஆசீர்வாதமுள்ள பெண்ணாக இருந்தாள். நாமும் இர ட்சிக்கப்பட்ட பின் நற்கிரியைகள் செய்வதற்காகவே கிறிஸ்து இயேசுவு க்குள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறோம். மேலும் பவுல் தீத்து 2 : 8 ல் நற்கிரி யைகளைக்குறித்து போதிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். எனவே நாமும் மேல் வீட்டரையிலிருந்து ஜெபிக்கிற அனுபவமும்,ஆவிக்குரிய அனுபவமும், தேவனோடு நடக்கிற அனுபவமும் வேண்டுமென்று ஜெபிக்க வேண்டும். 

தொற்காளின் மரணமும்: 

அப்போஸ்தலர் 9 : 37, 38 “அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். “

திடீரென்று தொற்காள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அத்தனை நற்கி ரியைகளைச் செய்தவள், தேவனுக்குப் பிரியமாக இருந்து சீஷி என்று பெயர் பெற்றவள் வியாதியில் அகப்பட்டதைப் பார்க்கிறோம். இதே போல் எலிசா மரணத்துக்கேதுவான வியாதியிலிருந்தானென்று 2 இராஜாக்கள் 13 : 14 ல் பார்க்கிறோம். இறந்து போன தொற்காளைக் குளிப்பாட்டி மேல் வீட்டரையில் கிடத்தி வைத்தனர். யூதர்களின் பாரம்பரியத்தில் மேல் வீடு என்பது ஒரு முக்கியமான பகுதியாகும். மேல் வீட்டை ஜெபம் செய் வதற்குப் பயன்படுத்துவர். பெந்தேகோஸ்தே நாளன்று மேல் வீட்டரை யில் இயேசுவின் சீஷர்களும், விசுவாசிகளுமாக 120 பேர் கூடியிருந்த போது, அங்கிருந்த அனைவர் மேலும் ஆவியானவர் இறங்கி பற்பல பாஷைகளைப் பேச வைத்ததை அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் பார்க் கிறோம். பேதுருவும் சீமோன் வீட்டில் தங்கியிருந்த போது மேல் வீட்ட ரையில்தான் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது கொர்நேலியு வீட்டி ற்குப் போகச் சொல்லி தரிசனத்தைப் பார்த்தார். அந்த நேரத்தில் பேதுரு லித்தாவில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். லித்தா ஊரானது தொற் காள் இருந்த யோப்பா பட்டணத்தின் சமீபமாக இருந்தது. யோப்பா பட்டணத்து விசுவாசிகளுக்கு பேதுரு லித்தா ஊருக்கு வந்திருப்பதை அறிந்திரு ந்தனர். அங்குள்ள சீஷர்கள் பேதுருவை அங்கு அழைத்து வரும்படி இரண்டு மனுஷர்களை அனுப்பி வைத்தனர்.

பேதுருவின் வருகையும்:

அப்போஸ்தலர் 9 : 39 “பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.” 

பேதுரு தம்மை அழைக்க வந்த இரண்டு பேருடன் சென்றான். அந்த இர ண்டு பேரின் பெயர் கொடுக்கப்படவில்லை. நாமும் அதே போல் அக்கி ரமங்களினாலும், கட்டுகளினாலும் மரித்துக் கிடக்கிறவர்களைப் பார்க் கப் போக வேண்டும். அங்குள்ளவர்கள் பேதுருவை மேல் வீட்டறைக்கு அழைத்துச் சென்றனர். தொற்காள் வியாதியாய் இருந்த வேளையில் பேதுருவை அழைத்து சுகம் கிடைக்கச் செய்யவில்லை. அதற்குக் கார ணம் அவள் மரித்து விடுவாள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டா ர்கள். பேதுருவைப் பார்த்தவுடன் தொற்காளால் நன்மைகளைப் பெற்ற விதவைகள்அழுதனர். அதுமட்டுமல்லாமல் அவள் அவர்களுக்குத் தைத் துக் கொடுத்த அங்கிகளையும், வஸ்திரங்களையும் பேதுருவிடம் காட்டி னார். அந்த விதவைகளுக்குத் தொற்காளின் பிரிவு தாங்க முடியாத துக்கத்தைக் கொடுத்திருந்தது. 

இதேபோல்தான் ஜெப ஆலயத்தலைவனான யவீருவின் ஒரே குமாரத்தி மரித்த போது இயேசு அங்கு சென்றார். அங்கிருந்தவர்கள் துக்கம் தாங்க முடியாமலும் இயேசு வந்து விட்டதால் அற்புதம் நடக்கும் என்று அறியா மலும் அழுததைப் பார்க்கிறோம். ஒவ்வொருவருடைய மரணத்திலும் அவரவர் செய்த நற்கிரியைகள் வெளிப்படும். நாமும் சிந்திக்க வேண் டும். தொற்காளைப் போலப் பிறருக்கு நற்கிரியைகளைச் செய்திருக்கி றோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் நம்முடைய மரண நேரத்தில் அது வெளிப்படும். நம்முடைய நற்கிரி யைகளைப் பார்த்து உலகம் பேச வேண்டும். 

பேதுரு உயிரோடெழுப்பிய அற்புதம்:

அப்போஸ்தலர் 9 : 40, 41, 42 “பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.”

பேதுரு அங்கு கூடியிருந்த எல்லோரையும் வெளியே அனுப்பினான். பின் முழங்கால் படியிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி ஜெபம் பண்ணினான். பின் தபித்தாளின் சடலத்தைப் பார்த்து தபித்தாளே எழு ந்திரு என்று அதிகாரத்தோடு கட்டளையிட்டான். அப்பொழுது ஆவியா னவர் தபித்தாளின் சடலத்துக்குள் கிரியை செய்து உயிரோடெழுப்பும் வல் லமையைக் கொடுத்தார். உடனே சடலத்தின் கண்கள் திறந்தது. தபித்தாள் பேதுருவைப் பார்த்து எழுந்து உட்கார்ந்தாள். பேதுரு அவளுக்குக் கைகொ டுத்து அவளை எழுந்திருக்கப் பண்ணினார். இதேபோன்ற சூழ்நிலை யில்தான் இயேசுவும் யவீருவின் மகளை எழுப்பி கைகொடுத்துத் தூக்கி விட்டார். அதேபோல் பேதுருவும் செய்ததைப் பார்க்கிறோம். வேதத் தில் எட்டு பேர் உயிரோடெழுப்பப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

பழைய ஏற்பாட்டில் எலியா சாறிபாத்தின் மகனையும் (1இராஜாக்கள் 17 : 20 – 22), எலிசா சூனேமியாளின் மகனையும் (2 இராஜாக்கள் 4 : 32 – 35), எலிசாவின் கல்லறையில் போட்ட மனுஷனையும் (2 இராஜாக்கள் 13 : 21), புதியஏற்பாட்டில் இயேசுவானவர் லாசருவையும் (யோவான் 11: 43,44), யவீருவின் மகளையும் (மாற்கு 5 : 41, 42), நாயீன் ஊர் விதவையின் மகளையும் (லூக்கா 7 : 14,15), பேதுரு தொற்காளையும் (அப்போஸ்தலர் 9 : 36 –41), பவுல் ஐந்திகு என்ற ஒரு வாலிபனையும் உயிரோடெழுப்பினர் (அப்போஸ்தலர் 20 : 9, 10). இதில் இரண்டு பேர் பெண்கள். அதில் ஒரு த்தி தொற்காள். தபித்தாள் உயிரோடெழுந்தவுடன் பேதுரு அங்குள்ள பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து அவர்களுக்கு முன் உயிரோடுள்ள தபித்தாளை நிற்கச் செய்தார். அந்தப் பட்டணத்தின் நிலமை தலைகீழாக மாறியது. முழு பட்டணத்தில் இயேசுவின் வெளிச்சம் வீசியது. 

முதலில் யோப்பாபட்டணத்தில் கொஞ்சப்பேர் சீஷர்களாக, பரிசுத்தவான் களாக இருந்தனர். தொற்காள் உயிரோடெழுப்பப்பட்டதைப் பார்த்து அநே கர் இயேசுவின் விசுவாசிகளாயினர். இந்த அற்புதம் பேதுருவின் மூலம் நடந்தாலும் ஜனங்கள் பேதுருவின் மேல் விசுவாசம் வைக்கவில்லை. இயே சுவின்மேல் விசுவாசம் வைக்கிறவர்களாக மாறினர். இதுதான் கிறிஸ்தவ அனுபவம். எந்த ஒரு அற்புதமும், நாம் செய்யும் எந்த ஒரு பெரிய காரியமும் தேவனை மகிமைப் படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதன்பின் பேதுரு யோப்பா பட்டண த்திலுள்ள சீமோன் வீட் டில் அநேக நாட்கள் தங்கியிருந்தானென்று அப்போஸ்தலர் 9 : 43ல் பார்க்கிறோம். 

தொற்காள் தனக்கு நன்மை செய்யத் திராணியிருக்கும்போது அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே என்ற நீதிமொழிகள் 3 : 27 ல் கூறியபடி ஜனங்களுக்கு நன்மை செய்து வந்தாள். பவுல் பிலிப்பியர் 2 : 4 ல்கூறியபடி பிறர் நலனில் அக்கறை கொண்டவளாக இருந்தாள். நாமும் தொற்காளைப் போல பிறருக்கு உதவி செய்யவும், பிறர் நலனில் அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கவும் வேண்டும். அவ்வாறு நாம் செய்யாவிட்டால் அது நமக்குப்பாவமாகும். நமக்குச் சுத்தமான பக்தி எது வென்று யாக்கோபு தன் நிருபத்தில் திக்கற்ற பிள்ளைகளும், விதவை களுக்கு உபத்திரவப்படும்போது அவர்களை விசாரிக்க வேண்டுமென் றும், நாம் இவ்வுலகத்தில் வாழும்போது கரைதிரையில்லாத வாழ்க்கை வாழவேண்டுமென்றும் கூறியிருப்பதால் (யாக்கோபு), நாம்அதன்படி வாழ முற்படுவோம். ஆமென்.

Related Posts