Menu Close

ஏழைகளை தேவன் பராமரிக்கும் விதம்

  • உபாகமம் 10 : 18 “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.”
  • 1 சாமுவேல் 2:8 “கர்த்தர் சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து, எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;”
  • சங்கீதம் 10:14 “ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.”
  • சங்கீதம் 35:10 “சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவன் யார்?”
  • எரேமியா 20:13 “கர்த்தர் எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.”
  • யோபு 5:15 “எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.”
  • சங்கீதம் 12:5 “ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர் பெருமூச்சின் நிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, நான் அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
  • ஏசாயா 41:17 “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத்தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வரளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.”
  • யாக்கோபு 2:5 “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், — தெரிந்து கொள்ளவில்லையா?”
  • ஓசியா 14:3 “திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம் பெறுகிறான்.”
  • எரேமியா 49:11 “திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, கர்த்தர் அவர்களை உயிரோடே காப்பாற்றுவார்.”
  • சங்கீதம் 146:9 “பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; கர்த்தர் திக்கற்ற பிள்ளையையும் விதவையும் ஆதரிக்கிறார்;”
  • சங்கீதம் 68:5 “கர்த்தர் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாயிருக்கிறார்.”
  • சங்கீதம் 138:6 “கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்.”
  • ஏசாயா 66:2 “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுக்குண்டு, கர்த்தரின் வசனத்துக்கு நடுங்குகிறவனையே கர்த்தர் நோக்கிப் பார்ப்பார்.”
  • உபா 10:18 “கர்த்தர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாயிருக்கிறார்.”
  • சிறுமைப்பட்டவனுடைய தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். – சங் 41:1
  • சங்கீதம் 72:12, 13 “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் கர்த்தர் விடுவிப்பார்.”
  • “பலவீனனுக்கும் எளியவனுக்கும் கர்த்தர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.”

Related Posts