இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்:
இந்த விசாரணைகளில் பல சட்ட விரோதங்கள் இருந்தன. 1. பண்டிகை காலத் தில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. 2. நீதிமன்றத்தின் ஒவ்வொரு உறுப் பினரும் குற்றவாளியாகத் தீர்ப்பதற்கு அல்லது விடுவிப்பதற்குகாகத் தனித் தனியாக வாக்களிக்க வேண்டும் ஆனால் இயேசு பாராட்டப்பட்டதற்காகத் தண்டிக்கப்பட்டார்.3. மரணதண்டனை வழங்கப்பட்டால், தண்டனை நிறைவேற் றப்படுவதற்கு முன் ஒரு இரவு கடக்க வேண்டும். இருப்பினும் சிலுவையில் இயேசு அறையப்படுவதற்கு முன்பு சில மணி நேரங்கள் மட்டுமே கடந்தி ருந்தன. 4. யூதர்களுக்கு யாரையும் தூக்கிலிட அதிகாரமில்லை..5. இரவில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. ஆனால் இந்த விசாரணை விடியற் காலைக்கு முன்பாக நடைபெற்றது (மத்தேயு 26 : 63 – 66) . 6. குற்றம் சாட்டப் பட்டவருக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இயேசுவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. 7. குற்றம் சாட்டப்பட்டவர் சுய குற்றவாளியாக தீர்க்கப்படுகின்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. ஆனால் இயேசு கிறிஸ்துவா என்று கேட்கப்பட்டார். 8. குற்றம் செய்தவரைப் பிடித்து விசாரிப்பது நியாயம். ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டு குற்றம் தேடினது மிகவும் அநியாயம் (யோவான் 11 : 50, மாற்கு 14 : 1, 55). 9. பொய் சாட்சிகளை உண்டாக்கினார்கள் (மத்தேயு 26 : 60, 61). குற்றவாளியின் சொற்களை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை (லூக்கா 22 : 67–71). 10. .பிரதான ஆசாரியன் குற்றவாளியை ஆணையிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு தீர்ப்பது அநியாயம் (மத்தேயு 26 : 63 – 66). 11. ஆலோசனை சங்கம் கூடிய இடம் பிரதான ஆசாரியனின் வீடு. இது முறைப்படி தேவாலயத்துடன் இணைந்திருக்கும் நீதிமன்ற அறையில் கூடித்தான் தீர்ப்பிட வேண்டும். இதுவும் அவர்கள் செய்தது தவறு (லூக்கா 22 : 54).
இயேசு குற்றமற்றவர் என்பதற்கு பல சாட்சிகள் உண்டு. அதில் முக்கியமான ஒரு சாட்சி யூதாஸ் மத்தேயு 27 : 4 ல் “இயேசுவின் இரத்தம் குற்றமற்ற இரத்தம்” என்றான். பிலாத்துவின் மனைவி இயேசுவை மத்தேயு 27 : 19 ல் நீதிமான் என்றாள். பிலாத்து 23 : 14 ல் இயேசுவிடம் ஒரு குற்றமும் இல்லையென்றான் ஏரோது லூக்கா 23 : 15 ல் இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லையென்றான். சிலுவையிலறை யப்பட்ட கள்ளன் லூக்கா 23 : 41 ல் குற்றம் செய்யாதவரென்றான். நுற்றுக்கதிபதி லூக்கா 23 : 47 ல் இயேசு நீதிமான் என்றான்.
சிலுவையிலறைந்தனர்:
இயேசுவைக் கொலைக் குற்றவாளிகளை அறைவது போல தேவகுமாரரான வரை, பிதாவின் வலதுபாரிசத்தில் இருந்தவரை, மகாபரிசுத்தரை சிலுவையில் அறைந்தனர். இயேசு அதற்குத் தன்னையே ஒப்புக்கொடுத்தார். இயேசுவின் சிலுவை மரணம் மட்டும் தான் உலக வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தனை பேருக்கும் இல்லாத புகழ் மாட்சிமை ஏன் இயேசுவுக்கு மட்டும் வந்ததென்றால், இயேசுவின் சிலுவை மரணம் மற்றவர்களை விட வித்தியாசமானது. இயேசுவினுடைய வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்களினால் ஒரு முடியைப் பின்னி, இயேசுவின் சிரசின்மேல் வைத்தனர். அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு “யூதருடைய ராஜாவே வாழ்க” என்று கூறி அவரைப் பரிகாசம் பண்ணினார்கள். இயேசுவின் மேல் துப்பி, அந்த கோலினால் இயேசுவின் சிரசில் அடித்தார்கள். பின்பு இயேசுவுக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். நமக்குப் பாவ மன்னிப்பைக் கொடுக்க இரத்தம் சிந்தினால் மட்டும் போதுமானது. ஆனால் அவர் பட்ட சவுக்கடிகள், அவரது சரீரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள், அவரது தலையில் சூட்டப்பட்ட முள்முடியனைத்தும் நம்முடைய வியாதிகளையும், பலவீனங்களையும் தீர்ப்பதற்காகத்தான்.
இயேசுகிறிஸ்துவானவர் தம்முடைய ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார் (எபிரேயர் 13 : 12). கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் கொல்கதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது சிலுவையில் அறைந்தனர். அதன்பின் இயேசுவின் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள் (மத்தேயு 27 :28 – 35). இயேசு சுமந்த சிலுவையின் எடை 150 கிலோ. சிலுவையின் நீளம் 15 அடி, சிலுவையின் அகலம் 8 அடி “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதி இயேசுவின் சிரசின் மேல் வைத்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு கள்ளனும், இடது பக்கத்தில் ஒரு கள்ளனுமாக அவரோடு கூட சிலுவையில் அறையப்பட்டனர். பிலாத்துவின் உள்ளத்திலும், ஏரோதின் உள்ளத்திலும் சாத்தான் புகுந்து இயேசுவைப் பாடுகளுக்குட்படுத்தி சிலுவையிலறைய வைத்தான். ஆனால் அவனது திட்டம் நிறைவேறாதபடி உயித்தெழுந்தார்.
எபிரேயர் 2 : 14, 15 “ ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத் தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத் தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரி யாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற் குள்ளான வர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.” ஆமென்.