இயேசு தனது முப்பதாவது வயதில் யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு வந்தார். யோவான் இயேசுவைப் பார்த்தவுடன் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான் – யோ 1:29 யோவான் இயேசுவைப் பார்த்து தடை செய்து “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா” என்றான். அதற்கு இயேசு
மத் 3:15 “இப்பொழுது இடங்கொடு. எப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.”
- இதைக் கேட்ட பின் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். ஞானஸ்நானம் பெற்று கரையேறின பின் என்ன நடந்தது என்றால்,
மத் 3:16,17 “இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.” - “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”
இயேசு பெற்ற ஞானஸ்நானம் திரித்துவத்தின் உண்மைக் கருத்தை வெளிப்படுத்துகிறது. இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றது தேவனோடு சரிநிகர் சமானமாக உள்ளார் என்று வெளிப்படை
யாக அறிவிக்கப்பட ஞானஸ்நானம் பெற்றார் – யோ 10:30 மேலும் இயேசு கரையேறினவுடனே ஒரு காட்சியைப் பார்த்தார். வானம் திறக்கப் பட்டதையும், தேவஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதையும் கண்டார். மேலும் பிதா இவரை “என்னுடைய நேசகுமாரன் என்று கூறிய சத்தத்தையும் கேட்கிறோம். பிதா தன்னுடைய குமாரன் என்று பேசுகிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுகிறார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவரிடம் இறங்கி வருகிறார். இவைகளில் திரித்துவம் செயல்படுவதைக் காண்கிறோம்.