விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கூடிவந்து ஆலோசனைசங்கத்தில் இயேசுவைக் கொண்டுவந்து நிறுத்தி “நீ கிறிஸ்துவா” என்று கேட்டனர்.அதற்கு அவர் “நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்” என்றார். “நீ தேவனுடைய குமாரனா?” என்றனர். அதற்கு அவர்: “நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான் என்றார்.” உடனே அவர்கள் வேறு சாட்சி வேண்டுவதில்லை என்று பிலாத்துவினிடத்தில் கொண்டு போனார்கள் – லூக்கா 22 : 66 – 71
பிலாத்து இயேசுவை நோக்கி “நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு: “நீ சொல்லுகிறபடிதான்” என்றார். பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களை சாட்டினார்கள். இயேசுவோ மாறுந்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்றார்.