மரியாள் நிறைகர்ப்பிணியாயிருந்த போது உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமேன்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்ததால் யோசேப்பும் மரியாளைக் கூட்டிகொண்டு கலிலேயாவிலிருந்து தாவீதின் நகரமாகிய பெத்லகேமுக்கு வந்தனர். பெத்லகேமுக்கு வந்தததும் மரியாளுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. சத்திரத்தில் தங்க இடம் கிடைக்காததால் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தினார்கள் – லூக் 2:1-7
தேவன் இராஜாவின் அரண்மனையையோ, மாளிகையையோ தெரிந்து கொள்ளாமல் தகுதியற்ற இடத்தையே தெரிந்து கொண்டார். அதேபோல் தான் தெரிந்து கொண்ட குடும்பம் ஏழை தச்சனின் குடும்பமே.