இயேசு உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர். நல்ல
மேய்ப்பனாய் மக்களை நடத்துகிறார். இயேசு மக்களை நடத்தும் ஆவிக்குரிய தெய்வீகத் தலைவர். சங் 23 ன்படி பிதா மேய்ப்பர் என்பதையும் யோவான் 10 : 10 – 16 ன்படி குமாரன் மேய்ப்பர் என்பதையும் ஆவியானவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறபடியால் யோ 16 : 13 ல் அவரும் மேய்ப்பர் என்பதையும் நாம் உணரலாம். நல்ல மேய்ப்பர் தமது ஆடுகளுக்காக தமது உயிரையும் தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். ஆடுகளுக்காக கவனமாக செயல்படுவார். ஆடுகளை அறிந்திருக்கிறார். ஆடுகளால் அறியப்பட்டுமிருக்கிறார். சிதறிக் கிடக்கும் ஆடுகளை தமது தொழுவத்தில் சேர்க்க விரும்புகிறார். இயேசு நல்ல மேய்ப்பர் யோவான் 10 : 11, 14 பெரிய மேய்ப்பர் எபி 13 : 20 பிரதான மேய்ப்பர் 1பே 5 : 4